MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: வானதி சீனிவாசன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: வானதி சீனிவாசன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: வானதி சீனிவாசன் கேள்வி

தமிழ்நாடு

முதல்வர் தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: வானதி சீனிவாசன் கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 16, 2026 6:41 மணி
Fernandez
Share
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
SHARE

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் சொந்தத் தொகுதியான சென்னையில், பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"சென்னை பெரம்பூரில், ஒரு இளம்பெண் தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் அவருடன் சேர்ந்த மேலும் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது ஒருபுறமிருக்க, கடந்த மாதமும் இதே பெரம்பூர் பகுதியில் மற்றொரு இளம்பெண்ணை அவரது முன்னாள் ஆண் நண்பரே வீடு புகுந்து தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

மேடைகளில் பெண்களை 'அக்கா', 'தங்கை', 'தோழி' என உணர்வுப்பூர்வமாகப் பேசும் முதல்வர் விஜய் அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவும்போது, ஒட்டுமொத்த தமிழகப் பெண்களுக்கும் முதல்வர் எப்படிப் பாதுகாப்பு வழங்கப் போகிறார் என்ற நியாயமான கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எழுந்துள்ளது. இது ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயமாகும்.

'சீரும் சிங்கங்களாய் ஏதோ பெரிய மாற்றம் கொண்டு வரப்போகிறோம்' என்ற பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட 'சிங்கப் பெண் அதிரடிப் படை' தற்போது சோர்வடைந்து, வழக்கமான மகளிர் காவல் நிலையங்களைப் போலவே செயல்படுவதற்கு, எதற்குத் தனியாக ஒரு சிறப்புப் படை அமைக்கப்பட்டது? என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே, பெண்களைக் காதல் என்ற பெயரில் அத்துமீறும் ஆண்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில், இந்த 'சிங்கப் பெண் படையை' உடனடியாக முடுக்கிவிட்டு, இரும்புக்கரம் கொண்டு கடுமையாகச் செயல்பட வேண்டும் என தமிழக அரசை நான் வலியுறுத்துகிறேன். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் தலையாய கடமையாகும்" என்று வானதி சீனிவாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சிங்கப் பெண் படைதமிழக அரசுபாஜகபெண்கள் சட்டம்பெண்கள் பாதுகாப்புபெரம்பூர்வானதி சீனிவாசன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் காவலர் நியமனத்தை தாமதிப்பது சட்டம் ஒழுங்கில் சமரசம்: நயினார் நாகேந்திரன்
Next Article இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கட்டிடம் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேற்றம்: அரசு எடுத்த அதிரடி முடிவு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம்

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நெரிசல்: ஒருவர் பலி, பலர் காயம்

ஒடிசா பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலால் ஒருவர் உயிரிழந்தார். 100க்கும்…

ஜூலை 16, 2026

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் விரைவில்: சுர்ஜேவாலா தகவல்

கர்நாடக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என…

ஜூலை 16, 2026

தொகுதி மறுவரையறை மசோதா: மோடிக்கு கார்கே அவசரக் கடிதம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், தொகுதி…

ஜூலை 16, 2026

இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேற்றம்: அரசு எடுத்த அதிரடி முடிவு!

இஸ்ரோவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வெளியேறியதை…

ஜூலை 16, 2026

காங்கிரஸ் எழுப்பும் முக்கிய பிரச்சனைகள்: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் அயோத்தி ராமர்…

ஜூலை 16, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: 6 பேர் கைது – பரபரப்பில் தமிழக அரசியல்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறி 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்எல்ஏ இளையராஜாவிடம் கட்சி மாற பேரம் பேசிய யூடியூபர்…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தைக் காக்கும் வலிமை நமக்கே! – ஸ்டாலின் உறுதி

மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் நலன் மற்றும் உரிமைகளைக் காக்கும் தனது கட்சியின் உறுதியைத் தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் உதவிய அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி கூறி, தமிழ்நாட்டைக் காக்கும்…

2 Min Read
தமிழ்நாடு

சர்வதேச செவிலியர் தினம்: அண்ணாமலை வாழ்த்து

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, செவிலியர்களின் சேவைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

இலவச மின்சாரம்… யாருக்கு எத்தனை யூனிட்கள் இலவசம்? – தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய், இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார். இத்திட்டத்தில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?