MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குட்கா வழக்கு: இளைஞர் மரணம் – முதல்வர் பதிலளிக்க வேண்டும் – உதயநிதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குட்கா வழக்கு: இளைஞர் மரணம் – முதல்வர் பதிலளிக்க வேண்டும் – உதயநிதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குட்கா வழக்கு: இளைஞர் மரணம் – முதல்வர் பதிலளிக்க வேண்டும் – உதயநிதி

தமிழ்நாடு

குட்கா வழக்கு: இளைஞர் மரணம் – முதல்வர் பதிலளிக்க வேண்டும் – உதயநிதி

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 5:54 மணி
Fernandez
Share
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

நாகர்கோவிலில் குட்கா விற்பனை வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் இருந்தபோது மரணமடைந்துள்ளார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கைது செய்யப்படும்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட பிறகு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்று பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இந்த சம்பவம் குறித்து உரிய பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி அவரை கைது செய்த காவல்துறையினர், அதே ஈரோட்டில் குட்கா விற்றதாகக் கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர். இது காவல்துறையின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டமும், த.வெ.க. நிர்வாகி என்றால் வேறொரு சட்டமும் என காவல்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சபரிவர்மனின் மரணத்திற்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gudka CaseSabariverman DeathTamil NaduUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்குட்கா வழக்குசபரிவர்மன் மரணம்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்: எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் புதிய கார் அறிமுகம்!
Next Article பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்ட சீலிங் ஃபேன் 7 நிமிடங்களில் ஃபேன் சுத்தம்: அசத்தல் டிப்ஸ்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

ஜோதிடர் ராசி பலன்களை விளக்கும் காட்சி
தமிழ்நாடு

30-07-2026 ராசிபலன்: அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம்

30-07-2026 இன்றைய ராசிபலன்: மேஷ ராசிக்கு நற்பெயர், ரிஷபத்திற்கு பணவரவு, கும்பத்திற்கு அதிகாரிகளின் ஆதரவு என அனைத்து ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன் விரிவாக.

4 Min Read
சென்னையில் போக்குவரத்து ஆணைய வேலைவாய்ப்பு அறிவிப்பு
கல்வி & வேலைவாய்ப்பு

சென்னையில் போக்குவரத்து ஆணைய வேலைவாய்ப்பு: டிகிரி, இன்ஜினியரிங் தகுதி

சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ.

1 Min Read
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான தேர்வு இது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பொருட்கள் விலை உயர்வு: சாமானியர்கள் தலையில் அடுத்த இடி!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், லாரி வாடகையும் உயர உள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?