MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஆளுநர் உரையை த.வெ.க-வினர் தம்பட்டத்திற்கே பயன்படுத்தியுள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஆளுநர் உரையை த.வெ.க-வினர் தம்பட்டத்திற்கே பயன்படுத்தியுள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்

லைஃப் ஸ்டைல்

ஆளுநர் உரையை த.வெ.க-வினர் தம்பட்டத்திற்கே பயன்படுத்தியுள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்

Admin
Last updated: ஜூன் 18, 2026 2:00 மணி
Admin
Share
SHARE

த.வெ.க-வினர் தங்களின் பெருமைகளை பறைசாற்றிக் கொள்வதற்காகவே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

'கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவ படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. தேர்தல் பரப்புரையின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்றைய முதலமைச்சர் வீர வசனம் பேசினார். ஆனால் இன்றைய நிலையை பார்க்கும்போது, திரைப்படத்தில் வருவதுபோல், “கண்ணாடிய பார்த்து பேசிட்டு இருக்கீங்க சார்” என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் ஆளுநர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார். இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரி கூட மாற்றாமல் படித்துள்ளார். இதிலிருந்தே தவெக – பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மீது காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது' என அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், 'பேரிடர் காலங்களில் உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல் உட்பட வாங்குவதுபோல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குகிறார் விஜய். த.வெ.க அரசு எழுதிக் கொடுத்ததை ஆளுநர் வாசித்துள்ளார். த.வெ.க-வினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக ஆளுநர் உரை உள்ளது. முதலமைச்சர், த.வெ.க-வினர் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக ஆளுநர் உரை' என்று விமர்சித்தார்.

'திமுக ஆட்சியில் அரசு எழுதி கொடுத்த எந்த உரையையும் ஆளுநர் படித்தது இல்லை. எங்கள் அரசின் திட்டங்களையே மீண்டும் அறிவித்துள்ளனர். மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடனே ஆளுநர் உரை அமைந்துள்ளது. தவெக – பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதோ என எண்ண தோன்றுகிறது' என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu PoliticsUdhayanidhi Stalinஆளுநர் உரைஉதயநிதி ஸ்டாலின்த.வெ.க.தமிழ்நாடு அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘பெத்தி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை!
Next Article ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அஞ்சலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்புப் பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும். பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள்: இஞ்சி, தேன், பப்பாளி, கொத்தமல்லி, எள்
லைஃப் ஸ்டைல்

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள்: இஞ்சி, தேன் கலவை சிறப்பு

மாதவிடாய் பிரச்சனைகளை இயற்கை முறையில் சரிசெய்ய உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள். இஞ்சி, தேன், பப்பாளி, கொத்தமல்லி, எள் போன்றவற்றை பயன்படுத்தி மாதவிடாயை சீராக்கலாம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள 'We the leaders' இயக்கத்தில் தகுதியானவர்களுக்கு விரைவில் பொறுப்புகள் வழங்கப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், சிலர் தனது…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தொடர் மின்வெட்டுக்கு தீர்வு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண, முதல்வர் விஜய் ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், 15,058 மின் பணியாளர்களை…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?