MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டம்மி முதல்வர், ஜோக்கர் அமைச்சர்கள் – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டம்மி முதல்வர், ஜோக்கர் அமைச்சர்கள் – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டம்மி முதல்வர், ஜோக்கர் அமைச்சர்கள் – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழ்நாடு

டம்மி முதல்வர், ஜோக்கர் அமைச்சர்கள் – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 3, 2026 3:54 மணி
Fernandez
Share
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார்
தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சி நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்வர் மற்றும் ஜோக்கர் அமைச்சர்களால் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 42 TMC தண்ணீர் கூட இதுவரை வரவில்லை என்றும், ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகியும் முதலமைச்சர் வாயிலிருந்து ஒருமுறை கூட 'பாஜக' என்ற வார்த்தை வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து விவசாயிகள் தான் அதிக ஏமாற்றங்களை சந்தித்து வருவதாகவும், 'விவசாயி' ஆக அடுத்த ஜென்மத்திற்காக காத்திருக்க தேவையில்லை, இந்த ஜென்மமே போதும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், 'ஊரான் வீட்டு நெய்யில் அவர் வீட்டுக்கு ஸ்வீட் செய்கிறார்' என்ற பழமொழியை குறிப்பிட்டு, தற்போதுள்ள முதல்வர், திமுக தலைவர் கொண்டுவந்த மெட்ரோ ரயிலில் சென்று ரீல்ஸ் எடுப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதியை அதிமுக அரசு மீறிவிட்டதாகவும், தற்போது வெறும் 35 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய முதல்வரால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆட்சியாளர்கள் பயந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக அமைச்சரவை மொத்தமும் ஜோக்கர் கூட்டமாக இருப்பதாகவும், அமைச்சர்கள் கழிவறையை கூட விடாமல் ரீல்ஸ் எடுத்து வெளியிடுவதாகவும், இப்படி ஒரு அரசை இந்தியாவே கண்டதில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் சாடினார்.

அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் உறவினர்களும் ஆய்வுக்கு செல்வதாகவும், திமுக மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாமல் நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவதற்கு காங்கிரஸின் தயவு தேவைப்படுவதால், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசை கேள்வி கேட்க துப்பில்லை என்றும், அதனால்தான் முதலமைச்சர் வாயிலிருந்து பாஜக என்ற வார்த்தையே வருவதில்லை என்றும் அவர் கூறினார். நேற்று டெல்லியில் போராடச் சென்ற விவசாயிகளை மகாராஷ்டிரா அரசின் காவல்துறை நாக்பூரில் வழிமறித்து தமிழ்நாட்டிற்கு திரும்பச் சொல்லிவிட்டதாகவும், ஆனால் இது குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை என்றும், ஏனென்றால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடக்கிறது என்றும், பாஜகவை எதிர்த்து பேச துப்பில்லை, திராணியில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

விவசாயிகளின் உரிமையை விட, முதல்வருக்கு தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சுயநலம் தான் முக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து விவசாயிகள் தான் அதிக ஏமாற்றங்களை சந்தித்து வருவதாகவும், 'விவசாயி' ஆக அடுத்த ஜென்மத்திற்காக காத்திருக்க தேவையில்லை, இந்த ஜென்மமே போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery WaterDMKFarmersTamil Nadu PoliticsUdhayanidhi Stalinஅமைச்சர் விமர்சனம்உதயநிதி ஸ்டாலின்காவிரி நீர்தமிழ்நாடு அரசியல்திமுகவிவசாயிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் மற்றும் வினோத் தோமர் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் விடுவிப்பு
Next Article நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) அறிவிப்பு பலகை என்.எல்.சி.யில் 45 பணியிடங்கள்: 12ஆம் வகுப்பு தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷன் விடுதலை

டெல்லி நீதிமன்றம், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து…

ஆகஸ்ட் 3, 2026

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் விடுவிப்பு

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி.…

ஆகஸ்ட் 3, 2026

நாடாளுமன்ற இரு அவைகள் எதிர்க் கட்சி அமளியால் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல்…

ஆகஸ்ட் 3, 2026

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பின்னடைவு

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு…

ஆகஸ்ட் 3, 2026

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்து…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

முதல்வர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டர்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்: விரைவில் வெளியீடு?

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு 'ஏ' (Adults Only) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோருடன் வந்தாலும் 18 வயதுக்குட்பட்டோர்…

1 Min Read
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் கைது செய்யப்பட்ட நபர்கள்
தமிழ்நாடு

நெல்லை: போலீசாரை தாக்கி சொத்து சேதம் – 5 பேர் கைது

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் போலீசாரை தாக்கி தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
அரசியல்

திமுக தோல்விக்கு அதிகார துஷ்பிரயோகமே காரணம்: போஸ் வெங்கட்

திமுகவின் தோல்விக்கு கட்சி நிர்வாகிகள் சிலரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் திமிரான செயல்பாடுகளே காரணம் என நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும்…

1 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பழனி கோவில் கட்டண உயர்வு குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

பழனி கோவில் கட்டண உயர்வு: ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

பழனி கோவில் விடுதி கட்டணத்தை ரூ.300 முதல் ரூ.1500 வரை உயர்த்திய ஜோசப் விஜய் அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?