MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுகவின் பேரிடர் காலம்: உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுகவின் பேரிடர் காலம்: உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுகவின் பேரிடர் காலம்: உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி

தமிழ்நாடு

திமுகவின் பேரிடர் காலம்: உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி

Admin
Last updated: ஜூலை 5, 2026 5:04 மணி
Admin
Share
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை, அவரது குடும்பத்தினரைக் கூட ஓரங்கட்டிவிட்டு, கட்சிக்கு வெளியில் இருந்த ஒரு குடும்பம் கைப்பற்றியதே தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடர் காலம் என தமாகா ஐடி விங் பதிலளித்துள்ளது. இது தொடர்பாக தமாகா ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர்க் காலத்தில்…" என்று திருவாய் மலர்ந்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே, எது உண்மையான பேரிடர்க் காலம் என்பதை நாங்கள் விளக்குகிறோம் எனத் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கான பேரிடர்க் காலம் என்பது, அண்ணா உருவாக்கிய கட்சியை, அவரது குடும்பத்தைக்கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில்கூட இடம் பெற்றிராத ஒரு குடும்பம் மட்டுமே கைப்பற்றியதே ஆகும். இதுவே தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம் என தமாகா ஐடி விங் குறிப்பிட்டுள்ளது. மேலும், அண்ணாவிற்குப் பிறகு முத்தமிழ் அறிஞர் கலைஞரை முதல்வராகவும் தலைவராகவும் ஆக்கப் பேருதவியாக இருந்த எம்.ஜி.ஆரை, நன்றி விசுவாசமின்றித் தூக்கி வீசிய ஒரு குடும்பத்தால் உருவானதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம் என்றும் விமர்சித்துள்ளது.

திருட்டு மாடல் திமுகவின் ஆட்சிக் காலம் முழுவதும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்பட்டதுதான் பேரிடர்க் காலம் என்றும், ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொள்ளை அடித்த தீயசக்தி திமுகவிற்கு, அரசியலில் கொள்ளை அடிக்க இயலாத நிலையை உண்டாக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைதான் திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம் என்றும் தமாகா ஐடி விங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்கி வரும் எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சிதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம் என தமாகா ஐடி விங் தெரிவித்துள்ளது. மேலும், அடித்த கொள்ளையால் அகப்பட்டு, தலைமறைவாகவும் வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் பதுங்கித் திரியும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும்தான் இது உண்மையான அரசியல் பேரிடர்க் காலம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர்கள் சிக்கினால், முக்கியக் குடும்பமும் சிக்கி, திக்கித் திணறுமோ என்பதுதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம் என்றும் தமாகா ஐடி விங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. இப்படி தீயசக்தி திமுகவால் தமிழக அரசியலுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிடர்க் காலம் ஏற்பட்டதும் உண்மை.

ஆட்சியில் இருந்தபோது அடித்த கொள்ளைகளால் திமுகவிற்கும் இப்போது பேரிடர்க் காலம் ஏற்பட்டு இருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியின் காரணமாக, தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது. அந்த வகையில், தீதும் சூதும் நிறைந்த திமுகவிடம் இருந்து தப்பிய தமிழக மக்களுக்கு இது அழகிய தென்றல் காலம். அகமகிழும் பேரின்பக் காலம். ஆனால், தீயசக்தி திமுகவிற்கு இது பேரிடர்க் காலம்தான். அதில் சந்தேகமே இல்லை. எப்படியோ இப்படி உளறியாவது உண்மையை ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள் என தமாகா ஐடி விங் தனது பதிவில் நிறைவு செய்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKPolitical DisasterTamil NaduThamakUdhayanidhi Stalinஅரசியல் பேரிடர்உதயநிதி ஸ்டாலின்தமாகாதமிழ்நாடுதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகிறார் திமுகவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர் – வைகோ ஆவேசம்
Next Article திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி-சார்ஜா இடையே கூடுதல் விமான சேவை தொடக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

அரசியல்

விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசு – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர்…

1 Min Read
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தமிழ்நாடு

மாதம் ரூ.3,000 பென்ஷன்: நாகை தொழிலாளர்களுக்கு ஆட்சியர் சூப்பர் செய்தி!

மத்திய அரசின் PM-SYM திட்டத்தின் கீழ், நாகை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறும் வாய்ப்பு. ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.

2 Min Read
முதல்-அமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்
தமிழ்நாடு

11 மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்-அமைச்சர் விஜய் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2 Min Read
திருச்சி நரேஷ் வீட்டில் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி ஆதரவாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தமிழக முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான திருச்சி நரேஷ் வீட்டில் ரூ.13 லட்சம் ரொக்கப்பணம் மற்றும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?