MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

தமிழ்நாடு

உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூலை 2, 2026 5:11 மணி
Admin
Share
SHARE

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், திமுக அரசுதான் காவல்துறையை ஏவி மக்களைக் கொன்றது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 'கரூரில் காவல்துறையை வைத்து திட்டமிட்டு மக்களை கொன்றது திமுக அரசு. எங்கள் தலைவர் மீது கை வைத்ததற்கும், உங்கள் மகன் உதயநிதியின் அரசியல் வாழ்விற்காக எங்கள் மக்களைக் காவல்துறை மூலம் கொன்று குவித்ததற்கும் நிச்சயம் விரைவில் பதிலடி கொடுப்போம்' என்று ஆவேசமாகப் பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், 'கரூர் கண்ணீர் பாவத்திற்கு.. கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார்.. நீங்கள் விட்ட கண்ணீர் கரூர் மக்களுடையது. நீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் கடைசி முதல்வர். கரூருக்கு அப்புறம் எங்களின் பரம எதிரி திமுக தான்' என்று கடுமையாக விமர்சித்தார்.

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும், மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிக்கப் போகிறார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் போன்றோர் திமுகவோடு சேரக்கூடாது என்று கூறியபோதும், பழனிசாமி அதை கேட்கவில்லை என்றும், அதனால்தான் அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தைரியமாக தவெகவில் இணைந்தார்கள் என்றும் அவர் கூறினார்.

அதிமுகவில் உள்ள 60% பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டதாகவும், இனி அதிமுக காகித அளவில் தான் இருக்கும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். முதல் இரண்டரை வருடம் இபிஎஸ் முதலமைச்சராகவும், அடுத்து உதயநிதி முதலமைச்சராகவும் வருவார்கள் என்றும் அவர் கணித்தார். இபிஎஸ்-ன் துரோகம், சூழ்ச்சியால் இனி அதிமுகவில் இபிஎஸ்ஸும், அவரது மகனும் மட்டுமே இருப்பார்கள் என்றும், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் சேலையை பேரவையில் வைத்து இழுத்தவர்களுடன் கூட்டணி வைக்க பேசி உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே இபிஎஸ் மறந்துவிட்டார் என்றும், அந்தந்தத் தொழில் செய்பவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்ய வேண்டும் என்றும், திமுகவால் இருந்த சூழல் இப்போது தவெகவால் இருக்கிறதா என்றும், இந்த மாற்றத்தை திமுகவால் கொடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆதவ் அர்ஜுனாஉதயநிதி ஸ்டாலின்கரூர்தமிழ்நாடு அரசியல்தவெகதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் இருந்து விலகிய விஜயபாஸ்கர்: ‘வலிகளையும் ரணங்களையும் சுமந்து வந்தோம்’
Next Article மேகதாது அணை: கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தி.மு.க. எம்.பி. கனிமொழி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காவல்துறை இருக்கிறதா? – கனிமொழி எம்.பி. கேள்வி

தி.மு.க. எம்.பி. கனிமொழி, தமிழ்நாட்டில் காவல்துறைக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும், இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

1 Min Read
வங்கிகள் செயல்படும் நாட்கள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: தமிழ்நாட்டில் எத்தனை?

ஆகஸ்ட் 2026-ல் நாடு முழுவதும் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை. தமிழ்நாட்டில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்ற முழு விவரம் இதோ.

2 Min Read
கல்லணை பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
தமிழ்நாடு

கல்லணை திறப்பு: சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் திறப்பு!

மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டு, முக்கொம்பு வந்தடைந்த நிலையில், நாளை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படுகிறது.

2 Min Read
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிடும் காட்சி
தமிழ்நாடு

தகவல் அறியும் உரிமைச் சட்ட விலக்கு: தவெக அரசு வெளிப்படைத்தன்மை குறித்து டிடிவி தினகரன் கேள்வி

தமிழக அரசின் பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும் அரசிதழ் பிறப்பித்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?