MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கண்ணாடி அலமாரியை உடைக்காமல் வைர நகைகள் மாயம்: எலி செய்த பகீர் கொள்ளை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கண்ணாடி அலமாரியை உடைக்காமல் வைர நகைகள் மாயம்: எலி செய்த பகீர் கொள்ளை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கண்ணாடி அலமாரியை உடைக்காமல் வைர நகைகள் மாயம்: எலி செய்த பகீர் கொள்ளை!

தமிழ்நாடு

கண்ணாடி அலமாரியை உடைக்காமல் வைர நகைகள் மாயம்: எலி செய்த பகீர் கொள்ளை!

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 1:13 மணி
Fernandez
Share
துமகூரு நகைக்கடையில் திருடு போன வைர நகைகள் மீட்கப்பட்ட காட்சி
துமகூரு நகைக்கடையில் எலி திருடிய வைர நகைகள் மற்றும் தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்ட காட்சி
SHARE

கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ள 'விஸ்வாஸ் ஜூவல்லர்ஸ்' நகைக்கடையில், கண்ணாடி அலமாரியை உடைக்காமல் வைர நகைகள் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்மமான திருட்டுக்கு ஒரு பெரிய எலி காரணமாக இருந்ததை கண்காணிப்பு கேமரா காட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன.

வழக்கம் போல் வியாபாரத்தை தொடங்க வந்த ஊழியர்கள், கண்ணாடி அலமாரியில் இருந்த வைர மோதிரங்கள் மற்றும் தங்கச் சங்கிலிகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடையில் எந்தவித உடைப்போ அல்லது கொள்ளை முயற்சி நடந்ததற்கான தடயமோ இல்லாததால், ஊழியர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. உள்ளூர் ஆசாமிகள் யாரேனும் கைவரிசை காட்டியிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க ஊழியர்கள் முயன்றனர்.

ஆனால், நகைக்கடை உரிமையாளர், கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்தார். அதிகாலை சுமார் 4 மணி அளவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, உரிமையாளரும் ஊழியர்களும் திகைத்துப் போயினர். ஒரு பெரிய எலி கடையின் மேற்புறத்தில் இருந்து குதித்து, வைர நகைகள் இருந்த கண்ணாடி அலமாரியை நோக்கிச் சென்றது.

அந்த எலி, அலமாரிக்கு அருகில் இருந்த ஒரு சிறிய துவாரத்தின் வழியாக உள்ளே நுழைந்து, மின்னல் வேகத்தில் வைர மோதிரங்கள் மற்றும் தங்கச் சங்கிலிகளைக் கவ்விக்கொண்டு, கேமராவுக்கு 'டாட்டா' காட்டிவிட்டு தப்பிச் சென்றது. நகைகளின் ஜொலிஜொலிப்பை திண்பண்டம் என நினைத்த எலி, அதனை வாயில் கவ்விச் சென்ற காட்சி சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியிருந்தது.

கொள்ளையன் யார் என்று தெரிந்தவுடன், ஊழியர்கள் எலி நகைகளை இழுத்துச் சென்ற பாதையை கண்டுபிடித்துச் சென்றனர். கடையின் ஒரு மூலையில் இருந்த பெரிய எலி வளை அவர்களுக்கு சிக்கியது. கடப்பாரை மற்றும் மண்வெட்டிகளுடன் அந்த வளைக்குள் தேடியபோது, எலி தனது படுக்கையறையாகப் பயன்படுத்திய அந்த வளைக்குள் 10 வைர மோதிரங்கள் மற்றும் 50 கிராம் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

காவல் நிலையம் வரை செல்லவிருந்த இந்த வழக்கு, ஒரு சிசிடிவி கேமரா காட்சி மூலம் எலியின் வளைக்கே கொண்டு செல்லப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. மொத்த நகைகளும் எவ்வித சேதாரமும் இன்றி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

இது தொடர்பாக பேசிய கடையின் உரிமையாளர், 'இனிமேல் லாக்கரை விட எலி வலையை தான் நாங்கள் ஜாக்கிரதையாகப் பார்க்க வேண்டும். முதலில் நகையைக் காணவில்லை என்று ஊழியர்கள் கூறியபோது நான் நம்பவில்லை. நகை எப்படி திருடு போனது என்பது எங்களுக்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஒரு ஊழியர் ஒரு அலமாரியில் இருந்த மோதிரம் வேறொரு அலமாரியில் கிடக்கிறது என்றார். ஆனால், அதில் டேக் இல்லை என்றும் கூறினார். இதனையடுத்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை நாங்கள் பார்க்க தொடங்கினோம். அப்போதுதான் இது எலியின் வேலை என தெரிந்தது' எனத் தெரிவித்தார்.

இந்த அசாதாரண சம்பவம், துமகூரு நகைக்கடை உரிமையாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் திருட்டு சம்பவங்களில் எலிகளின் பங்களிப்பும் இருக்கக்கூடும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எலி திருட்டுகர்நாடகாதங்கச் சங்கிலிகள்திருட்டுதுமகூருநகைக்கடைவிஸ்வாஸ் ஜூவல்லர்ஸ்வைர நகைகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கடலில் மீன் பிடிக்கும் மீனவர் ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போன 1¼ கிலோ அரிய வகை மீன்!
Next Article தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) லோகோ தமிழக அரசில் 839 பணியிடங்கள்: TNPSC அறிவிப்பு வெளியானது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மக்களவையில் பிறப்பு மற்றும் இறப்பு திருத்த மசோதா நிறைவேற்றம் குறித்த செய்திகள்

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: முக்கிய நோக்கம் என்ன?

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா 2026 விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. தாமதமான பதிவுகளுக்கு…

ஜூலை 31, 2026

எதிர்க்கட்சி முழக்கங்களால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு; பிறப்பு, இறப்பு மசோதா நிறைவேற்றம்

எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்…

ஜூலை 31, 2026

பாஜகவில் சேர மிரட்டல்: சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு

டெல்லியில் போராட்டம் நடத்தியபோது பாஜகவில் சேர அழுத்தம்…

ஜூலை 31, 2026

காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் கோரிக்கை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தின்போது காயமடைந்த காவலர்களின்…

ஜூலை 31, 2026

ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போன 1¼ கிலோ அரிய வகை மீன்!

புதுச்சேரி மீனவர் ஒருவரின் வலையில் 1¼ கிலோ…

ஜூலை 31, 2026

You Might Also Like

மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

மதுரை மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: விசாரணைக்கு புதிய நீதிமன்றம்

மதுரை மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு விசாரணை, ஜூலை 29 முதல் மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவான நீதி…

1 Min Read
தமிழ்நாடு

புதிய நடுவர் மன்றம்: தமிழக அரசின் முடிவு – தங்கம் தென்னரசு

அணை கட்டுவதை தடுப்பதற்கு புதிய நடுவர் மன்றம் அவசியம் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது திமுகவின் முடிவு…

1 Min Read
தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு பிறகு, அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் இன்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில

1 Min Read
தமிழ்நாடு

கேள்வி கேட்பதே குற்றமா? சி.விஜயபாஸ்கர் மறைமுக விமர்சனம்!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அரசியலில் கேள்வி கேட்பதே குற்றமாகப் பார்க்கப்படுவதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?