திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள பொது கழிப்பறையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்மந்தை காலனியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்பவர், கழிப்பறைக்குச் சென்று போதை ஊசி செலுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். த.வெ.க. ஆட்சியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த ஜூன் 8ஆம் தேதி அன்று, நண்பர்களுடன் போதை ஊசி பயன்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
You Might Also Like
ஆளுநர் மாளிகை தனி செயலகம்: மாணிக்கம் தாகூர் கண்டனம்
தமிழக ஆளுநர் மாளிகை தனி செயலகம் போல செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என காங்கிரஸ் எம்.எல்.ஏ மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதை மக்கள் ஏற்க…
2 Min Read
கரூர் தொகுதிக்கு நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் வெங்கடரமணனிடம் ஜோதிமணி எம்.பி. கோரிக்கை
கரூர் தொகுதிக்கு புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெங்கடரமணனிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 Min Read
ஆன்லைன் மூலம் பேன்சி எண்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை இனி ஆன்லைன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி எளிதாகப் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய கட்டண விகிதங்களின்படி, பேன்சி எண்களுக்கு…
1 Min Read
உதயநிதியை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது: மாணிக்கம் தாகூர்
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது என்றும், அவர் நன்றி மறந்து பேசுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் முதல்வராவதை தடுக்க உதயநிதி…
1 Min Read
