MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இன்றைய ராசிபலன்: 07-07-2026 – காரிய அனுகூலம், சில எதிர்மறை நிகழ்வுகள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இன்றைய ராசிபலன்: 07-07-2026 – காரிய அனுகூலம், சில எதிர்மறை நிகழ்வுகள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இன்றைய ராசிபலன்: 07-07-2026 – காரிய அனுகூலம், சில எதிர்மறை நிகழ்வுகள்!

தமிழ்நாடு

இன்றைய ராசிபலன்: 07-07-2026 – காரிய அனுகூலம், சில எதிர்மறை நிகழ்வுகள்!

Admin
Last updated: ஜூலை 7, 2026 6:39 காலை
Admin
Share
இன்றைய ராசிபலன் 07-07-2026
07-07-2026 இன்றைய ராசிபலன்
SHARE

07-07-2026 அன்று, மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள், அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும், அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும். வைத்தியச் செலவு இருக்காது. சேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். செய்த முயற்சிகளைத் தொடரவும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9.

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலம் சீராகும். இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்கு, நோயின் தாக்கம் முழுமையாகக் குறையும். பூரண குணம் ஏற்படும். அதனால் வைத்தியச் செலவுகளும் விலகும். தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள். தொழிலை லாபகரமாக நடத்தலாம். கடன்களையும் அடைக்கலாம். சிறிது சிறிதாக சேமிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண், அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள். அதனால் உங்கள் மரியாதை உயரும். பழைய கடன்களை அடைத்து, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி, புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை, அதிர்ஷ்ட எண்கள்: 3, 7.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, அதிர்ஷ்ட எண்கள்: 5, 7.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், அதிர்ஷ்ட எண்கள்: 2, 7.

மகர ராசிக்காரர்களுக்கு இன்று எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு, அதிர்ஷ்ட எண்கள்: 1, 3.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். பொதுவில் நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

மீன ராசிக்காரர்களுக்கு இன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், பாதிப்பை உண்டாகாமல் காப்பாற்றப்படுவீர்கள். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:07-07-2026AstrologyRasi PalanToday Rasi Palanஇன்றைய ராசிபலன்கடகம்கன்னிகும்பம்சிம்மம்தனுசுதுலாம்மகரம்மிதுனம்மீனம்மேஷம்ராசிபலன்ரிஷபம்விருச்சிகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார் பள்ளி மாணவியரை ‘லாஸ்ட் பெஞ்ச்’ என அழைத்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்
Next Article நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அமைச்சரா? சீமான் கேள்வி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகிறார்

எல்லைப் பாதுகாப்பில் அலட்சியம்: மம்தா பானர்ஜி மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க 1,129 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யுமாறு கோரியும்,…

ஆகஸ்ட் 21, 2026

பெல்லட் குண்டு தாக்குதல்: FIR கோரி ராகுல் காந்தி தர்ணா

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு…

ஆகஸ்ட் 21, 2026

கொச்சி மெட்ரோ பெயர் மாற்றம்: கேரள மெட்ரோ என மாற்ற பரிந்துரை

கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தை ‘கேரளம்…

ஆகஸ்ட் 21, 2026

இண்டிகோ இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு: முன்பதிவு பாதிப்பு

இண்டிகோ விமான நிறுவன இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு…

ஆகஸ்ட் 21, 2026

ஏமன், சோமாலியா அருகே 2 இந்திய கப்பல்கள் கடத்தல்: 22 மாலுமிகள் மீட்பு

ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரைப் பகுதிகளில் 22…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

த.வெ.க. ஆட்சியிலும் தொடர்கிறதா லாக்-அப் மரணங்கள்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் சிறையில் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் போராட்டம். த.வெ.க. ஆட்சியிலும் லாக்-அப் மரணங்கள் தொடர்கிறதா என நயினார் நாகேந்திரன் கேள்வி.

2 Min Read
முதலமைச்சர் விஜய் பட்ஜெட் 2026 அறிவிப்புகளை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் 2026: ரூ. 8,000 உதவித்தொகை, 10% இடஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புகள்

தமிழக பட்ஜெட் 2026-ல் முதலமைச்சர் விஜய் மாதந்தோறும் ரூ. 8,000 உதவித்தொகை மற்றும் 10% இடஒதுக்கீடு போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

2 Min Read
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

டம்மி முதல்வர், ஜோக்கர் அமைச்சர்கள் – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சி நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்வர் மற்றும் ஜோக்கர் அமைச்சர்களால் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். காவிரி நீர் விவகாரம்,…

2 Min Read
தமிழ்நாடு

போதைக்கு எதிராக அண்ணாமலை: பொள்ளாச்சி, திருச்செந்துாரில் பொதுக்கூட்டம்

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 'வீ தி லீடர்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஜூலை மாதம் முழுவதும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?