MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு வேண்டாம்: தவெகவின் உறுதியான நிலைப்பாடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு வேண்டாம்: தவெகவின் உறுதியான நிலைப்பாடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வு வேண்டாம்: தவெகவின் உறுதியான நிலைப்பாடு

தமிழ்நாடு

நீட் தேர்வு வேண்டாம்: தவெகவின் உறுதியான நிலைப்பாடு

Fernandez
Last updated: ஜூலை 21, 2026 8:24 மணி
Fernandez
Share
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பதிவு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பதிவு
SHARE

நீட் தேர்வு முறைகேடுகளை மட்டும் எதிர்ப்பதில்லை, மாறாக நீட் தேர்வு என்பதே அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு என அக்கட்சி விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக தவெக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதே தவெகவின் முக்கியக் கோரிக்கையாகும். ஒருவேளை, இதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, ஒரு இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும், இதுவே நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய தவெகவின் பார்வை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டை தவெகவின் வெற்றித் தலைவர் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும், மற்றவர்களின் உழைப்புக்கும், சிந்தனைக்கும், போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அறமற்ற அரசியல் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தவெக கேட்டுக்கொண்டுள்ளது. இதை மீறி, தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும் என்றும், அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamTamil Nadu PoliticsTNKதமிழக வெற்றிக் கழகம்தவெகநீட் தேர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டாடா நெக்ஸான் EV கார் டாடா நெக்ஸான் EV: ரூ.2 லட்சம் முன்பணம், EMI எவ்வளவு தெரியுமா?
Next Article கோவை மற்றும் மதுரை நகரங்களில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறித்த மத்திய அரசின் தரவு அறிக்கை பெண் தொழிலாளர் பங்கேற்பில் தமிழ்நாடு முதலிடம்: கோவை, மதுரை முன்னிலை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

புதிய கூட்டணி உதயம்: பெயர் விரைவில் அறிவிப்பு – முதல்வர் விஜய்

தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், அதை முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

1 Min Read
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தோழர் ரவிக்குமார் ஆகியோர் டெல்லியில் போராடும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறுதல்
தமிழ்நாடு

நீட் தேர்வு: டெல்லி மாணவர் போராட்டத்திற்கு விசிக ஆதரவு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தலைவர் திருமாவளவன் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலியில் நாளை மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணி அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (16.5.2026) பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2…

2 Min Read
தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட பாராட்டு விழா

முதலமைச்சர் விஜய்க்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. த.வெ.க. கட்சி 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?