அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை தமாகாவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இணைப்பு விழா மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.
இந்த இணைப்பு மூலம், 4 முன்னாள் அமைச்சர்கள் உட்பட சுமார் 20,000 பேர் தமாகாவில் இணைய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்களும் நாளை தமாகாவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாகாவில் இணைய உள்ள முக்கிய நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், திருச்சி வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன், பி. கே. வைரமுத்து, இளம்பை தமிழ்செல்வன், ஒரத்தநாடு சேகர், திருச்சி சீனிவாசன், மன்றாஜ், ராஜவர்மன், சாதன் பிரபாகர், திருஞானசம்பந்தம், சுந்தரராஜன் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் அடங்குவர்.
இந்த நிகழ்வு டெல்டா பிராந்தியத்தில் அதிமுகவின் கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது, அதிமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.