MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்: தமிழக அரசியலில் பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்: தமிழக அரசியலில் பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்: தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழ்நாடு

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்: தமிழக அரசியலில் பரபரப்பு

Admin
Last updated: ஜூலை 4, 2026 1:21 மணி
Admin
Share
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டம் தொடர்பான செய்தி
தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்: தமிழக அரசியலில் பரபரப்பு
SHARE

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம், தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ரூ.180 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள்.

இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்எல்ஏ டாக்டர் இளையராஜா, தன்னை அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ், ரமேஷ், கார்த்தி உள்ளிட்ட 8 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை நடத்தவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தின்படி, தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முதலில் சட்டப்பேரவையில் அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதற்கு 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டதால், அவர்களை பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்துள்ளனர்.

இதற்காக, ஒரு தனியார் நிறுவனம் மூலம் சுமார் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும், இந்த திட்டம் வெற்றி பெற்றால் தங்களுக்கும் பெரும் தொகை வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்தெந்த எம்எல்ஏக்களை அணுக வேண்டும் என்ற பட்டியல் வழங்கப்பட்டதாகவும், அதன்படி பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எந்த எம்எல்ஏவும் பணத்திற்கு இணங்கவில்லை என்று வாக்குமூலத்தில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் வெளிவரும் வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, தமிழக அரசியலில் மேலும் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ConspiracyDMKRs 180 Crore BribeTamil Nadu Politicsசதித்திட்டம்செந்தில் பாலாஜிடாக்டர் இளையராஜாதமிழக அரசியல்தவெகரூ.180 கோடி பேரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நிர்வாக சீரமைப்புக்கு குழு அமைப்பு
Next Article சென்னை முகப்பேர் பகுதியில் திருட்டு சம்பவம் நடந்த வீடு சென்னை: நடன கலைஞர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு – பூசாரி கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசும் காயமடைந்த நபர்

துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய சாட்சி: உயிருக்கு ஆபத்து என பரபரப்பு

துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதாகவும், கர்நாடக வனத்துறையினரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்…

ஆகஸ்ட் 18, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் பேரழிவு: 12 பேர் உயிரிழப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் 28 மாவட்டங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

முதல் மனைவியை கைவிட்ட அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை

முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல்…

ஆகஸ்ட் 18, 2026

மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்: லாரி மோதி 8 பேர் பலி, 32 காயம்

மத்தியப்பிரதேசத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சென்ற டெம்போ மீது…

ஆகஸ்ட் 18, 2026

கல்வி அமைச்சர்கள் ஏன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்? – அபிஜீத் தீப்கே கேள்வி

கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் தங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நயாரா பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடி குறைப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால், நயாரா நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.

1 Min Read
தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய இயக்குனர் பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவு…

1 Min Read
இளையராஜா பாடலை பயன்படுத்த தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு

இளையராஜாவின் பாடலை பயன்படுத்த ஜி.வி. பிரகாஷுக்கு தடை

இளையராஜாவின் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜி.வி. பிரகாஷின் படத்தில் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

வெங்கடநாராயணா நியமனத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது 'வெந்த புண்ணில் வேல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?