MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க ரூ.15 லட்சம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க ரூ.15 லட்சம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க ரூ.15 லட்சம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாடு

எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க ரூ.15 லட்சம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Fernandez
Last updated: அக்டோபர் 22, 2026 12:39 மணி
Fernandez
Share
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவது தொடர்பான அரசாணை
எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க ரூ.15 லட்சம்: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு
SHARE

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்எல்ஏ) கார் வாங்குவதற்கான நிபந்தனைகளில் தமிழக அரசு திருத்தங்களை மேற்கொண்டு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின்படி, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்களுக்கு ரூ.26 லட்சம் வரையிலும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் அரசு செலவில் கார் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை அரசு செயலாளர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ளார். பதவி நீக்கம் அல்லது ராஜினாமா போன்ற காரணங்களால் பதவிக்காலம் முடிந்தால், அரசு வழங்கிய காரை உடனடியாக அரசிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்டுள்ள அரசிதழ் விவரங்களின்படி, அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு வாகனம் வாங்குவதற்கான உச்சவரம்பு ரூ.26 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த உச்சவரம்பு ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்குள் வாகனத்தின் ஷோரூம் விலை, வரிகள், பதிவுக் கட்டணம் மற்றும் மோட்டார் வாகனக் காப்பீட்டுக் கட்டணம் ஆகியவை அடங்கும். மேலும், வாகனக் கொள்முதலுக்கான உச்சவரம்பு ஆண்டுதோறும் 5 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மரணம், பதவிக்கால நிறைவு, பதவியிலிருந்து நீக்கம், ராஜிநாமா அல்லது தகுதிநீக்கம் போன்ற காரணங்களால் பதவியை இழந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதேபோல், சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோர் இந்தக் காரணங்களால் பதவியை இழந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களைத் தமிழ்நாடு சட்டமன்றச் செயலகச் செயலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கும் சூழ்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். இது வாகனங்கள் முறையாக திரும்பப் பெறப்படுவதை உறுதி செய்யும்.

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநருக்கான செலவுகளைப் பொதுத் துறை மூலம் அரசே ஏற்கும். சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் வாகனங்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநர் செலவுகளைச் சட்டமன்றச் செயலகம் ஏற்கும்.

ஆனால், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநருக்கான செலவுகளை, தமிழ்நாடு ஊதியங்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வாகனப் படியிலிருந்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்களே ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனம் வாங்கும் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MLA Car SchemeNew GOTamil Nadu Governmentஎம்எல்ஏ கார்சட்டமன்ற உறுப்பினர்தமிழக அரசுபுதிய அரசாணைவாகனக் கொள்முதல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தீபாவளி பண்டிகைக்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லும் நபர் தீபாவளிக்கு பயணம்: வீட்டைப் பூட்டும் முன் கவனிக்க வேண்டியவை!
Next Article இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடும் காட்சி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தர பிரதேசத்தில் அரசு மானியம் பெறுவதற்காக நடைபெற்ற போலி திருமணங்கள் தொடர்பான விசாரணை

உத்தர பிரதேசத்தில் போலி திருமணங்கள்: மானியம் பெற நடந்த மோசடி

உத்தர பிரதேசத்தில் அரசு மானியம் பெற போலி திருமணங்கள் நடந்த விவகாரத்தில், 194…

அக்டோபர் 22, 2026

பினராயி விஜயன் மீதான எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மற்றும்…

அக்டோபர் 22, 2026

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு மூடல்

சபரிமலை ஐயப்பன் கோயில் துலாம் மாத பூஜைகள்…

அக்டோபர் 22, 2026

டைகர் ஷெராப் மீதான தாக்குதல்: குற்றவாளிகள் ‘ஆபரேஷன் நிறைவு’ என தகவல் அனுப்பியதாக போலீஸ் விசாரணை

நடிகர் டைகர் ஷெராப் மீதான தாக்குதல் முடிந்ததும்,…

அக்டோபர் 21, 2026

திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு: ரூ.25.79 கோடி உண்டியல் வசூல்

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் சக்கரஸ்நான நிகழ்வுடன் நிறைவு…

அக்டோபர் 21, 2026

You Might Also Like

சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா
தமிழ்நாடு

சென்னை மேயர் பிரியாவுக்கு சமூக வலைதள டார்ச்சர்: காவல் ஆணையரிடம் புகார்!

சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவுக்கு சமூக வலைதளங்களில் மர்ம நபரால் மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் தொடர் தொல்லைகள் வருவதாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

2 Min Read
கவிஞர் வைரமுத்து தமிழ்த்தாய் வாழ்த்து மசோதா குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து மசோதா சட்டமாக இயற்றப்பட வேண்டும்: வைரமுத்து

இனத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், ஒரு மசோதாவாக சட்டமாக்கப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார். இது தமிழ் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1 Min Read
டெல்லி உதவி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தமிழக அமைச்சர்கள் குழு
தமிழ்நாடு

நேபாள வெள்ளம்: டெல்லி உதவி மையத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு

நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் பெரும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்குத் துணையாக, தமிழக அமைச்சர்கள் குழுவினர் நேற்று டெல்லிக்குச் சென்றனர்.

2 Min Read
தமிழ்நாடு

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்: மால்வேர் தாக்குதல் எச்சரிக்கை

வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களை குறிவைத்து பெரிய அளவிலான மால்வேர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக CERT-In எச்சரித்துள்ளது. .vbs கோப்புகளை திறந்தால் சாதனத்தின் கட்டுப்பாடு பறிபோவதுடன்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?