எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க ரூ.15 லட்சம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க ரூ.15 லட்சம்: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்எல்ஏ) கார் வாங்குவதற்கான நிபந்தனைகளில் தமிழக அரசு திருத்தங்களை மேற்கொண்டு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின்படி, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்களுக்கு ரூ.26 லட்சம் வரையிலும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் அரசு செலவில் கார் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை அரசு செயலாளர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ளார். பதவி நீக்கம் அல்லது ராஜினாமா போன்ற காரணங்களால் பதவிக்காலம் முடிந்தால், அரசு வழங்கிய காரை உடனடியாக அரசிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்டுள்ள அரசிதழ் விவரங்களின்படி, அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு வாகனம் வாங்குவதற்கான உச்சவரம்பு ரூ.26 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த உச்சவரம்பு ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்குள் வாகனத்தின் ஷோரூம் விலை, வரிகள், பதிவுக் கட்டணம் மற்றும் மோட்டார் வாகனக் காப்பீட்டுக் கட்டணம் ஆகியவை அடங்கும். மேலும், வாகனக் கொள்முதலுக்கான உச்சவரம்பு ஆண்டுதோறும் 5 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மரணம், பதவிக்கால நிறைவு, பதவியிலிருந்து நீக்கம், ராஜிநாமா அல்லது தகுதிநீக்கம் போன்ற காரணங்களால் பதவியை இழந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதேபோல், சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோர் இந்தக் காரணங்களால் பதவியை இழந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களைத் தமிழ்நாடு சட்டமன்றச் செயலகச் செயலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கும் சூழ்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். இது வாகனங்கள் முறையாக திரும்பப் பெறப்படுவதை உறுதி செய்யும்.

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநருக்கான செலவுகளைப் பொதுத் துறை மூலம் அரசே ஏற்கும். சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் வாகனங்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநர் செலவுகளைச் சட்டமன்றச் செயலகம் ஏற்கும்.

ஆனால், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநருக்கான செலவுகளை, தமிழ்நாடு ஊதியங்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வாகனப் படியிலிருந்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்களே ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனம் வாங்கும் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version