கூட்டணி ஆட்சி என்ற ராமேசுவரம் கோவில் பஞ்சாங்கம் தகவல் பலித்தது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியானது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், ராமேசுவரம் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளான, தமிழ்ப்புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். கடந்த மாதம் தமிழ்ப்புத்தாண்டு அன்றும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதில் அடுத்த ஓராண்டுக்குள் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து முன்கணிப்பாக தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

அந்த பஞ்சாங்கத்தில் பல கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தல்களை சந் திக்க நேரும். மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். இதனால் பல சரிவுகளை சந்திக்க வேண்டி வரும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல் கள் இடம்பெற்றிருந்தன.

எனவே ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியது பலித்துள்ளது. இது அரசியலில் பெரும் திருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version