MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!

தமிழ்நாடு

நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!

Admin
Last updated: மே 11, 2026 9:50 காலை
Admin
Share
SHARE

இலங்கை அருகே உள்ள கடல் பகுதியில் நில விய வளிமண்டல கீழடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடைமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்த்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

நெல்லையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்திலும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் காலை வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இதமான காற்று வீசியது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 44.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 358 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.52 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 57.87 அடியாக உயர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளான கடனா அணை 32.30 அடியாவும். கருப்பாநதி 34.45 அடியாகவும், குண்டாறு 19 அடியாகவும் உயர்ந்தது. மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 173 மில்லி மீட்டர் மழை பதிவானது. நாலுமுக்கு பகுதியில் 164 மி.மீ., காக்காச்சி பகுதியில் 148 மி.மீ., மாஞ்சோலையில் 132 மி.மீ. மழை பதிவானது. அதேபோல் பாபநா சத்தில் 39 மி.மீ., சேரன்மாதேவியில் 20.20 மி.மீ., மணிமுத்தாறில் 14.20 மி.மீ., அம்பையில் 3.60 மி.மீ. மழை பதிவானது.

தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 17 மி.மீ., சிவகிரி யில் 13 மி.மீ., கருப்பாநதி அணை பகுதியில் 9.50 மி.மீ. மழையும் பதி வானது. அதேபோல் தென்காசி, கடனாநதி, செங்கோட்டை ஆகிய இடங் களில் தலா 3 மில்லி மீட்டர் மழையும், ராமநதி அணை, சங்கரன்கோ வில் ஆகிய இடங்களில் தலா 2 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்
Next Article மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் – கிரிஷ் சோடங்கர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

சாவர்க்கர் சர்ச்சை: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி. சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி…

ஆகஸ்ட் 14, 2026

பிரிவினையின்போது மோடி பிரதமராக இருந்திருந்தால்: யோகி ஆதங்கம்

இந்தியப் பிரிவினையின்போது நரேந்திர மோடியைப் போன்ற ஒருவர்…

ஆகஸ்ட் 14, 2026

குட்கா தடை: 24 மணி நேர கெடு விதித்த பாஜக எம்.பி ராகவேந்திரா

கர்நாடகாவில் குட்கா விற்பனை மீதான தடையை 24…

ஆகஸ்ட் 14, 2026

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: மராட்டிய அரசு அதிரடி

மராட்டிய அரசு, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள்…

ஆகஸ்ட் 14, 2026

கரூர் சம்பவம்: அரசு வேலை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கருணை…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

சென்னை உயர் நீதிமன்ற வளாகம்
தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம், அதிக கூட்டம் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போடவும், மதுபானங்களுக்கு ரசீது வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள்…

2 Min Read
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுகவுடன் கூட்டணி: சி.வி.சண்முகம், வேலுமணி மீது அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே சி.வி.சண்முகம், வேலுமணிதான் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு. எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி தரப்பு தவறான குற்றச்சாட்டை…

1 Min Read
தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் ஆய்வு: அமைச்சர் வன்னி அரசுக்கு ஊழியர்கள் புகார்

சென்னையில் அம்மா உணவகத்தில் உணவு அருந்திய அமைச்சர் வன்னி அரசு, ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார். காய்கறிகள் முறையாக வழங்கப்படுவதில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு பாடகர் அறிவு கைது: உதயநிதி கண்டனம்

நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்த ராப் பாடகர் 'தெருக்குரல் அறிவு' கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசை அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?