MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - “ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்

விளையாட்டு

“ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்

Admin
Last updated: மே 11, 2026 9:50 காலை
Admin
Share
SHARE

ராய்ப்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் கனவு சுக்குநூறாக உடைந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் அடைந்த படுதோல்வியால், 2026 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தத் தோல்விக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மைதானத்தில் ஏக்கத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

ராய்ப்பூரில் உள்ள ஷாஹித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது. ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய 19வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. இளம் வீரர் ராஜ் பாவா வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ரொமாரியோ ஷெப்பர்ட் விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணிக்கு வெற்றியை உறுதி செய்வது போல தெரிந்தது. ஆனால், 4வது பந்தில் புவனேஸ்வர் குமார் அடித்த அந்த ஒரு சிக்சர் மும்பையின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. இறுதியில் கடைசி பந்தில் பெங்களூரு த்ரில்லர் வெற்றி பெற்றது.

காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா ஆடாததால், தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்திய சூர்யகுமார் யாதவ் இந்த தோல்வியால் நிலைகுலைந்து போனார். போட்டிக்கு பின் பேசிய அவர், “இப்படி ஒரு நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இருப்பதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இது ஒரு கசப்பான உண்மை. நாங்கள் எப்போதும் வெற்றியையே பார்த்த அணி, இப்போது பிளே ஆப் வாய்ப்பை இழந்தது தாங்க முடியாத வழியாக உள்ளது. அடுத்த ஆண்டு இன்னும் பலமாக மீண்டு வருவோம்” என கலங்கியபடி தெரிவித்தார்.

இந்த சீசனில் மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளைச் சந்தித்துள்ளது. தொடக்கத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றியுடன் சீசனைத் தொடங்கினாலும், அதன் பிறகு அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் அதலபாதாளத்திற்குச் சென்றது. திலக் வர்மாவின் அதிரடி சதம் குஜராத் அணிக்கு எதிராக ஒரு வெற்றியைத் தேடித்தந்தாலும், மற்ற வீரர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணியால் மீண்டெழ முடியவில்லை.

கடந்த 2020ம் ஆண்டு ஐந்தாவது முறையாக கோப்பையை வென்ற பிறகு, மும்பை அணியின் கிரிக்கெட் பயணம் சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த அந்த அணி, இப்போது 2026லும் பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விக்கெட் எடுக்கத் திணறியதும், முக்கிய பேட்ஸ்மேன்கள் ஃபார்ம் அவுட் ஆனதும் இந்த மாபெரும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. சாம்பியன் அணியின் இந்த பரிதாப நிலை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு
Next Article நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய பிரதிநிதி பேசும் காட்சி

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி. பாகிஸ்தானில் பொம்மை அரசாங்கம் இருப்பதாகவும்,…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

டெல்லியில் 3 மாதங்களில் 377 குழந்தைகள் நலன் சார்ந்த புகார்கள்

டெல்லியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: சுப்மன் கில், சாய் சுதர்சன் வரலாற்று சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்திய ஜோடி

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் ஐபிஎல் வரலாற்றில் 2500 ரன்களைக் கடந்த கூட்டணி என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர்.…

2 Min Read
விளையாட்டு

இந்திய ‘ஏ’ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் வாய்ப்பு!

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்தியா 'ஏ' அணியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளார்.

1 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
விளையாட்டு

நியூசிலாந்து தொடர்: சுப்மன் கில் விலகல்? ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!

நியூசிலாந்து தொடரில் டெஸ்ட் போட்டிகளுக்காக கேப்டன் சுப்மன் கில் விலகல்? அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியை வழிநடத்துவார் என தகவல்.

2 Min Read
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது போன்ற காட்சி
விளையாட்டு

50 ஆண்டுகளில் மிக முக்கிய டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியாவின் புதிய முடிவு

50 ஆண்டுகளில் மிக முக்கிய டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா தீவிர பயிற்சி. பயிற்சிப் போட்டிகள் இன்றி நேரடியாக களமிறங்க முடிவு. ஜனவரி 21 முதல் தொடர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?