MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை வெளியீடு: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை வெளியீடு: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
தமிழ்நாடு

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை வெளியீடு: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

Admin
Last updated: June 25, 2026 12:03 pm
Admin
Share
SHARE

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கை இன்று (25.06.2026) காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதில் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருட்கள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத் துறையில் நடந்த செயல்பாடுகள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மின்வாரியத்தில் சுமார் 9136 பேர் பணி ஓய்வு பெற்ற நிலையில், வெறும் 343 பேர் மட்டுமே புதிதாக பணியில் எடுக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் 65,921 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெள்ளை அறிக்கையின்படி, மின்மின்துறையின் கடன் தற்போது ரூ. 2,47,130 கோடியாக உயர்ந்துள்ளது. 2001-2006 காலகட்டத்தில் வருவாய் 59,084 கோடியாகவும், செலவு 67,439 கோடியாகவும் இருந்து, 8,355 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டும், பற்றாக்குறை 933 கோடியாக இருந்த நிலையில், புதிய திட்டங்கள் இல்லாமலேயே செலவு அதிகரித்து, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 34,447 கோடி மின்வாரியத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கினார்.

மேலும், 2001 இல் 6,492 கோடியாக இருந்த மின் துறையின் கடன் தற்போது 2,47,130 கோடியாக உயர்ந்திருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 87,000 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். மின் துறைக்கு 1,40,635 ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 74,714 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் 16,000 பேர் ஓய்வு பெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TNEBஅமைச்சர் நிர்மல் குமார்தமிழ்நாடு மின்சார வாரியம்மின்சாரத் துறைவெள்ளை அறிக்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?
Next Article அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் கவலை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில்…

June 25, 2026

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…

June 25, 2026

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமைச்சரானதும் அம்மாவுக்கு தெரியாது: அமைச்சர் ரமேஷ் உருக்கம்

அமைச்சர் ரமேஷ், தனது தாய்க்கு தான் அமைச்சராக இருப்பதே தெரியாது என்று உருக்கமாகப் பேசியுள்ளார். இலக்கை நோக்கி உழைத்தால் வெற்றி நிச்சயம் என அவர் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலை, வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ரீல்ஸ் பார்த்து ஆட்சியை இழந்த மக்கள்: மேயர் பிரியா பேச்சு

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், திமுகவின் தேர்தல் தோல்வி தற்காலிகமானது என்றும், மக்கள் ரீல்ஸ் பார்த்து நிஜ ஆட்சியை இழந்துவிட்டதாக வருந்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வெயில் நிலவுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?