MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்
தமிழ்நாடு

தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்

Admin
Last updated: May 14, 2026 6:41 pm
Admin
Share
SHARE

தூத்துக்குடி, தாளமுத்துநகர் அருகே மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் மீனவர் ஸ்னோவின் (26) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் சூசை படுகாயமடைந்தார்.

நேற்று இரவு, ஸ்னோவின் மற்றும் அவரது நண்பர் சூசை ஆகியோர் கடலுக்கு சென்றுவிட்டு, மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தனராஜ் (எ) பாண்டி (20), முத்துக்குமார் (எ) கருப்பு (20) மற்றும் அவர்களுடன் மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி, ஆத்திரமடைந்த சந்தனராஜ், முத்துக்குமார் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து ஸ்னோவினை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற நண்பர் சூசைக்கும் தலையில் கத்திக்குத்து விழுந்தது.

தாக்குதல் நடத்திய 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஸ்னோவின் மற்றும் சூசை ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்னோவின் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சூசைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime NewsThoothukudi murderகொலைதமிழ்நாடு செய்திகள்தூத்துக்குடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய ‘ஏ’ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் வாய்ப்பு!
Next Article டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் வீட்டிலிருந்து பணி: புதிய அறிவிப்புகள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…

June 28, 2026

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…

June 28, 2026

டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…

June 28, 2026

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவையில் ₹200 கள்ளநோட்டு அச்சடித்து 3 பேர் கைது: போதைப்பொருளும் சிக்கியது!

கோவை மாநகரில் ரூ.200 கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

1 Min Read
தமிழ்நாடு

சேலம் அருகே மின்னல் தாக்கி 15 ஆடுகள் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம் ஓமலூரில் மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. மேலும், கனமழையால் வாழை மரங்கள் சேதமடைந்து, மின்கம்பங்கள் விழுந்தன.

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்-அமைச்சர் விஜய்யின் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்றார்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?