MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வி.சி.க மாநாட்டில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்: பாதியிலேயே பேச்சு நிறுத்தம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வி.சி.க மாநாட்டில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்: பாதியிலேயே பேச்சு நிறுத்தம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வி.சி.க மாநாட்டில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்: பாதியிலேயே பேச்சு நிறுத்தம்

தமிழ்நாடு

வி.சி.க மாநாட்டில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்: பாதியிலேயே பேச்சு நிறுத்தம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 18, 2026 6:46 காலை
Fernandez
Share
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாநாட்டில் உரையாற்றுகிறார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்
SHARE

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) நடத்திய ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில்’ கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் பாதியிலேயே தனது உரையை முடித்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாத காலமாக மாவட்ட வாரியாக நடைபெற்ற மண்டல செயற்குழு கூட்டங்களில், இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து கட்சித் தொண்டர்களுக்கு திருமாவளவன் எடுத்துரைத்திருந்தார். இதன் காரணமாக, உளுந்தூர்பேட்டை பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த மாநாட்டில், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தீபம் ஏந்தி ரேம்ப் வாக் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் உரையாற்றத் தொடங்கினார். காலை முதலே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வி.சி.க தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததால், மாநாட்டில் கடும் கூட்டம் நிலவியது.

மாநாட்டில் தொல்.திருமாவளவன் உரையாற்றுகையில், 'தமிழர்களின் மொழி, இன மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க, இலக்கியம் மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என்று மத்திய அரசை வலியுறுத்துவதாகக் கூறினார். மேலும், 'ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே அரசு, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்கிற ஆதிக்க அரசியலை முற்றிலுமாக நிராகரித்து, மதச்சார்பற்ற, சமத்துவ ஜனநாயக இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும். பிற மொழி மற்றும் இன மக்களைப் பகையாகக் கருதாமல் அனைத்து தேசிய இனங்களின் எழுச்சிக்கும், ஐக்கியத்திற்கும் துணைநின்று கூட்டாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த மாநாடு உறுதியேற்கிறது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், 'தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விசிக வளர வேண்டும்; இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆளும் கட்சி; இன்று அன்பு சகோதரர் ஜோசப் விஜயுடன் கூட்டணி வைத்துள்ளோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்; விசிகவும் ஆளுங்கட்சியாக பரிணமிக்கும்' என்று தெரிவித்தார்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் அரங்கத்தை மீறி வெளியே லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருப்பதைக் கண்ட திருமாவளவன், 'உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இந்த இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன்' என்று கூறி, கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டார். மேடையிலும் தொண்டர்கள் குவிந்ததால், அவர் டென்ஷனாகி தொண்டர்களைக் காட்டமாகப் பேசி அங்கிருந்து கீழே அனுப்பி வைத்தார்.

இந்த திடீர் உடல்நலக்குறைவு மற்றும் பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்ட சம்பவம் மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil National Uprising ConferenceThirumavalavanUlundurpettaiVCKஉளுந்தூர்பேட்டைதமிழ்த் தேசிய எழுச்சி மாநாடுதிருமாவளவன்தொல். திருமாவளவன்வி.சி.க
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கால்பந்து வீரர் யேல் டிரெப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது இத்தாலியில் சோகம்: நீச்சல் குளத்தில் மூழ்கி கால்பந்து வீரர் படுகாயம்!
Next Article ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு அறிவிப்பு ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்: ஆகஸ்ட் 21 முதல் ஜீ5 தளத்தில்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே

கல்வி அமைச்சர்கள் ஏன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்? – அபிஜீத் தீப்கே கேள்வி

கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்…

ஆகஸ்ட் 18, 2026

நாக்பூர் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி

நாக்பூரில் 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த…

ஆகஸ்ட் 18, 2026

ஜார்க்கண்ட் தேர்வு ரத்து: தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை…

ஆகஸ்ட் 18, 2026

நீட் தேர்வு போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை குழு அமைப்பு

டெல்லியில் நீட் தேர்வு போராட்டத்தின் போது காவல்…

ஆகஸ்ட் 18, 2026

தெலங்கானா வெப்சீரிஸ் பார்த்து தாய்-மகன் கொடூரம்: பெண்களை கொலை செய்து எரித்த அதிர்ச்சி

தெலங்கானா வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்ட தாய்-மகன் ஜோடி,…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு…

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு. தி.மு.க. உடன் தான் இருப்போம், அக்கூட்டணியில் இருந்து வர மாட்டோம் என்றும் திட்டவட்டம்...

0 Min Read
தமிழகத்தில் மின்சார நுகர்வு உச்சத்தை எட்டியதைக் காட்டும் வரைபடம்
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் மின் நுகர்வு உச்சம்: 475.45 மில்லியன் யூனிட் பதிவு!

தமிழகத்தில் ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது. கோடைக்கால உச்ச நுகர்வை மிஞ்சிய இந்த தேவை, புழுக்கம் மற்றும் ஏசி…

2 Min Read
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்
தமிழ்நாடு

போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம்

போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 07) தரிசனம் செய்தார். கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆகஸ்ட் 30…

2 Min Read
பத்திரப்பதிவு அலுவலகத்தில் டோக்கன் வழங்கும் காட்சி
தமிழ்நாடு

பத்திரப்பதிவு: நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்க அரசு உத்தரவு

ஆடி மாதம் தொடங்குவதையொட்டி, நாளை (16.07.2026) பத்திரப்பதிவு அலுவலகங்களில் முன்பதிவு டோக்கன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு சார்பதிவாளர் அலுவலகங்களில் 150 டோக்கன்களும், இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் 300 டோக்கன்களும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?