MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ மீண்டும் வழக்குப்பதிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ மீண்டும் வழக்குப்பதிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ மீண்டும் வழக்குப்பதிவு

தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ மீண்டும் வழக்குப்பதிவு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 19, 2026 11:01 காலை
Fernandez
Share
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரிகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரிகள்.
SHARE

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி அன்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரில் அவர் சொந்தமாக கட்டி வந்த வீட்டை பார்வையிட சென்றபோது, மர்ம கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம், காவல்துறையின் என்கவுன்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த உதவி கமிஷனர் சரவணன், 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மொத்தம் 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களில் திருவேங்கடம் மற்றும் பிரபல தாதா நாகேந்திரன் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர்.

மேலும், பிரபல ரவுடிகளான மொட்ட கிருஷ்ணன் மற்றும் சம்போ செந்தில் ஆகியோர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக காவல்துறையால் சேர்க்கப்பட்டனர். ஆனால், அவர்களை கைது செய்ய முடியவில்லை. சம்போ செந்தில் இங்கிலாந்து நாட்டிலும், மொட்ட கிருஷ்ணன் அரபு நாட்டில் ஒன்றிலும் தலைமறைவாகி பதுங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களை கைது செய்ய சர்வதேச காவல்துறையின் உதவியும் நாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரினர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிபிஐ போலீசார் இந்த வழக்கின் விசாரணையை தற்போது கையில் எடுத்துள்ளனர். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன.

செம்பியம் போலீசார் பதிவு செய்திருந்த வழக்கின் அடிப்படையில், சிபிஐ போலீசார் தற்போது மீண்டும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய விசாரணையில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு சாட்சியிடமும் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிபிஐ விசாரணையின் மூலம் புதிதாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து, சிபிஐ போலீசார் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 26 பேரில், தற்போது 12 பேர் நீதிமன்ற ஜாமீன் பெற்று வெளியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் அரங்கேறிய பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவிற்கு நேரில் சென்ற சிபிஐ போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கு யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள், உண்மையான காரணங்கள் என்ன, கொலைக்கு பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்து சிபிஐ முழுமையான விசாரணையை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இந்த வழக்கில் தனிப்படை விசாரணை அதிகாரியாக இருந்து, திருவேங்கடத்தை என்கவுன்டர் மூலம் சுட்டு வீழ்த்திய காவல் ஆய்வாளர் புகாரி, சமீபத்தில் சவுகார் பேட்டை தொழிலதிபரை மிரட்டி ரூபாய் 40 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த முக்கிய பின்னணியில், சிபிஐ தற்போது இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ArmstrongBahujan Samaj PartyCBIChennaiMurder CasePeramburஆம்ஸ்ட்ராங்கொலை வழக்குசிபிஐசென்னைபகுஜன் சமாஜ் கட்சிபெரம்பூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடுகிறார் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Next Article கோவை பூ மார்க்கெட்டில் ஓணம் பண்டிகைக்காக பூக்கள் விற்பனை ஓணம் பண்டிகை: கோவையில் பூ மார்க்கெட்டில் களைகட்டும் விற்பனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு ₹5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வமுள்ள 2 விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5.80 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். தடகள வீராங்கனை சமீஹா…

2 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

இயக்குநர் கே. பாக்யராஜின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

1 Min Read
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
தமிழ்நாடு

கரூர் வழக்கு: ஆதவ் அர்ஜுனா தான் முக்கிய குற்றவாளி – ஆர்.எஸ்.பாரதி

கரூர் வழக்கில் ஆதவ் அர்ஜுனா தான் முக்கிய குற்றவாளி என்றும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.…

3 Min Read
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?