MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்வர் பதவிக்கு பேரம்? திருமாவளவன் பகீர் பேட்டி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் பதவிக்கு பேரம்? திருமாவளவன் பகீர் பேட்டி!

தமிழ்நாடு

முதல்வர் பதவிக்கு பேரம்? திருமாவளவன் பகீர் பேட்டி!

Admin
Last updated: மே 18, 2026 10:59 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், 108 இடங்களை கைப்பற்றிய நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு ஆதரவுக்கரம் நீட்ட பல்வேறு கட்சிகள் முன்வந்தன. இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) ஆதரவு கடிதம் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த தாமதத்திற்கு காரணம்கோரி, அதிமுக மற்றும் திமுக வி.சி.க. தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க முயன்றதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த திருமாவளவன், இதுகுறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 'முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.'

'இடதுசாரிகள் மற்றும் வி.சி.க. ஆதரவு விஜய்க்கு கொடுக்க முடிவு செய்து, நாங்கள் ஆதரவு கடிதம் கொடுத்தோம். ஆனால், ஆதரவு கடிதம் கொடுத்த பிறகும், முதலமைச்சர் பதவி தருவதாக அதிமுக தரப்பில் துணை முதலமைச்சராக இருக்க ஒப்புக்கொண்டதாகவும் எனக்கு ஒரு தகவல் வந்தது. நீங்கள் சம்மதித்தால் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக திமுக சொன்னதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. அதை நான் Fun ஆக எடுத்துக் கொண்டேன். ஆனால் அவர்கள் சீரியசாக ஒரு மூவ் நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். நாங்கள் நாளை பத்திரிகையாளர்கனை சந்தித்து அறிவிக்கப் போகிறோம் என்று வந்துவிட்டோம்,' என திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும், 'எங்களுடைய பிரசாரம் பாஜக-வுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதுதான். திமுக-வுக்கு எதிரான வாக்குகள் சீமான் கட்சி, அதிமுக, பாஜக-வுக்கு சென்றன. எங்களுடைய பிரசாரம் த.வெ.க.-வுக்கு எளிதாகிவிட்டது. பாஜக-வுக்கு எதிராக எங்களுக்கு வாக்களித்த வாக்குகள் த.வெ.க.வுக்கு போய்விட்டது. உதாரணத்திற்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்குகள். சினிமாவில் விஜய் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர், அரசியலில் ஜோசப் விஜய் பிராண்ட் படுத்தப்பட்டதால் பெரும்பாலான கிறிஸ்தவ வாக்குகள் அந்த பக்கம் சென்றுவிட்டது. சுமார் 80 சதவீதம் கிறிஸ்தவ வாக்குள் அந்த பக்கம் சென்றுவிட்டது. முஸ்லிம் வாக்குகளில் 60 முதல் 70 சதவீதம் வாக்குகள்தான் திமுக-வுக்கு வந்துள்ளது. அங்கும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக, நாதக, பாஜக-வின் முக்கியமான (Core) வாக்குகளும் த.வெ.க.வுக்கு சென்று விட்டன. எங்கள் வெற்றிக்கு முக்கியமாக இருந்தது சிறுபான்மையினர் வாக்குகள். அந்த வாக்குகள் பெருமளவில் மாற்றமாகியுள்ளது. இது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,' என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu ElectionVCKஅரசியல்திருமாவளவன்விசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article படங்களுக்குப் புதிய தொழில்நுட்பம்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு!
Next Article 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை: திமுக முன்னாள் எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் ஓப்பன் சேலஞ்ச்!

அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'செங்கோட்டையன் அமைச்சர் பதவியை விடுவதற்கு தயாரா?' என சவால் விடுத்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல்…

1 Min Read
தமிழ்நாடு

நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் செய்த உதவி!

வீடில்லாமல் தவித்த நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் தனது எம்.எல்.ஏ குடியிருப்பில் தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார். மேலும், சொந்த வீடு ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

லாரி உரிமையாளர்கள் கோரிக்கை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தம்!

பெட்ரோல், டீசல் விலையில் திடீர் உயர்வால் பொதுமக்கள் பாதிப்பதாகக் கூறி, விலை உயர்வை திரும்பப் பெற லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை

அமைச்சர் ராஜ்மோகன், வன்னியரசுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?