MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுகவை விமர்சிக்கும் தவெகவுடன் நிற்பதில் நியாயம் உள்ளது – திருமாவளவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - திமுகவை விமர்சிக்கும் தவெகவுடன் நிற்பதில் நியாயம் உள்ளது – திருமாவளவன்

அரசியல்

திமுகவை விமர்சிக்கும் தவெகவுடன் நிற்பதில் நியாயம் உள்ளது – திருமாவளவன்

Admin
Last updated: மே 27, 2026 2:35 மணி
Admin
Share
SHARE

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவுடன் இணைந்து செயல்படுவதில் ஒரு நியாயம் இருப்பதை திமுகவினர் உணர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "தவெகவுக்கு ஆதரவாக நாம் எடுத்த முடிவை ஆ.ராசா உள்ளிட்ட சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவோடு களத்தில் நிற்பதை, அவ்வளவு எளிதாக எப்படி அவர்களால் கடந்து செல்ல முடியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "ஜூன் 14-ம் தேதி விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தவெக தனிப்பெரும் கட்சி என்ற இடத்தை பிடித்தது. ஆட்சியமைக்க அவர்களுக்கு 11 இடங்கள் தேவைப்பட்டன. குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துவிடக் கூடாது, மறு தேர்தல் வந்து விடக்கூடாது என்பதற்காக தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயூஎம்எல் மற்றும் விசிக கட்சிகள் ஆதரவளித்தன. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நாம் இந்த அரசியல் நெருக்கடியை உணர்ந்து ஆதரவை நல்கியுள்ளோம். இது தொடர்பாக பலரும் விமர்சனங்களை செய்து வருகின்றனர். இது தவிர்க்க முடியாததுதான், இதனை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இதில் வருத்தப்படவோ, ஆத்திரப்படவோ எதுவும் இல்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் நாம் இடம்பெற்றிருந்தோம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணி வெற்றிபெறக்கூடாது என்பதை மட்டுமே இலக்காக வைத்து பிரச்சாரம் மேற்கொண்டோம். நாம் எதிர்பார்த்ததை போல அதிமுக-பாஜக கூட்டணி வீழ்த்தப்பட்டது. பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. பாஜக இங்கே பெரியளவில் காலூன்ற விரும்பினார்கள், அவர்கள் முன்வைத்த சதிமுயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அந்த வகையில் நாம் எடுத்த முயற்சி வெற்றிதான்.

தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில், திமுக கூட்டணி வெற்றி பெற முடியாமல் போனது. இதனை தேர்தலுக்கு முன்பே கணித்தோம். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் பெரும்பான்மையான வாக்குகளை தவெக பிரிக்கும், இதனால் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது, ஆனால் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்ற யூகம் நமக்கு இருந்தது. இதனால் தான் நானும் சட்டப்பேரவைக்கு வரவேண்டும், தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என தேர்தலில் போட்டியிடுவதாக நான் அறிவித்தேன். தேர்தலுக்கு பின்பு தவெக பெறும் வாக்குகளை வைத்து கூட்டணிகளும், அணி சேர்க்கைகளும் மாறும் என நான் சொல்லியிருந்தேன். ஆனால், தவெக தனிப்பெரும் கட்சியாக மாறிவிட்டது. ஆட்சியமைக்க கூடுதல் இடங்கள் தேவை எனும் நெருக்கடி ஏற்பட்ட போது, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேகவேகமாக அவர்களுக்கு ஆதரவளித்தது. எனவே இடதுசாரிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் முடிவெடுப்பதாக வெளிப்படையாக அறிவித்தேன். நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக இடதுசாரிகள் அறிவித்தனர். அதனையொட்டி விசிக உயர்நிலைக்குழு கூடி விவாதித்தது. உடனே ஏன் நீங்கள் அறிவிக்கவில்லை என நம்மை எப்போதும் விமர்சிப்பவர்கள் விமர்சித்தார்கள். அமைச்சரவையில் சேரவேண்டும் என உயர்நிலைக்குழுவில் முடிவெடுத்தனர். பொதுச்செயலாளர்களுடன் ஆலோசித்து வெளியில் இருந்து ஆதரிக்க முடிவெடுத்து கடிதம் வழங்கினோம்.

ஆனால், முதல்வராக, துணை முதல்வராக திருமாவளவன் பேரம் பேசுகிறார் என அவதூறு பரப்பப்பட்டது. முன்பு ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோதும் நம் மீது பெரும் அவதூறு பரப்பட்டது. இப்போது யார் யார் நம் மீது காழ்ப்பு கொண்டுள்ளனர் என்பதை அறியும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யோடு நாம் பங்கேற்கவில்லை. அந்தக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்ததால், அவர் மீது 6 மாத ஒழுங்கு நடவடிக்கை எடுத்தோம். பின்னர் அவர் விசிகவிலிருந்து விலகி, தவெகவில் இணைந்தார். அவரை வாழ்த்தி அனுப்பினோம். கரூர் சம்பவத்தின்போது ஆதவ் அர்ஜுனாவை தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதன்பின்னர் அவரோடு எப்போதும் பேசியதில்லை. இப்போது ஆ.ராசா நாம் எடுத்த முடிவை விமர்சனம் செய்திருந்தார். நான் அதனை பொருட்படுத்தவேண்டாம், எதிர்வினை ஆற்ற வேண்டாம் என அறிவுறுத்தினேன். அவர் காங்கிரஸை விமர்சிக்கவில்லை. தவெகவின் அழைப்பின் பேரில் அமைச்சரவையில் இடம்பெற்றோம். தவெகவுக்கு ஆதரவு அளிக்கும்போது, ஸ்டாலினை சந்தித்து, ‘இடதுசாரிகளின் முடிவின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தேன்’. அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஆதரவு நல்கலாம் என இசைவு தெரிவித்தார். ஆனால், அமைச்சரவையில் இடம்பெறும் முடிவை ஸ்டாலினிடம் சொல்ல முடியவில்லை. ஆனால், திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் சொல்லிவிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டோம். திமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் விசிக பயணித்தது. அந்தக் கூட்டணியை பாதுகாக்க எங்களால் ஆன பங்களிப்பை எவ்வளவு அளித்துள்ளோம் என்பதை ஸ்டாலின் நன்கு அறிவார். உதயநிதியும் நன்கு அறிவார். அதையும் தாண்டி நாம் எடுத்த முடிவை ஆ.ராசா உள்ளிட்ட சிலர் விமர்சிக்கிறார்கள் என்பது சற்று வலியாக உள்ளது. என்றாலும் அவர்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவோடு களத்தில் நிற்பதை, அவ்வளவு எளிதாக எப்படி அவர்களால் கடந்து செல்ல முடியும். கடும் சொற்களால் விமர்சிக்க கூடாது, அந்தப் பதிவை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எனவே ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தேவையற்றது. விசிகவினர் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடவேண்டும். நம்மை பிடிக்காதவர்கள் விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள். திமுக அணியிலேயே தொடர்ந்தாலும், திமுக கொத்தடிமை என்பார்கள். வேறு நிலைப்பாட்டை எடுத்தாலும் விமர்சனம் செய்வார்கள். காங்கிரஸை விட, விசிக செய்த துரோகம் பெரியது என விமர்சிக்கிறார்கள். ஆதவ் அர்ஜூனாவோடு சேர்ந்து சதி செய்தோம் எனச் சொல்கிறார்கள். ஆனால், ஸ்டாலினின் மனசாட்சிக்கு தெரியும், விசிகவும், திருமாவளவனும் எவ்வளவு நேர்மையான உறவை கொண்டிருந்தோம் என்பது. திமுக கூட்டணியை கட்டுக்கோப்பாக வைக்கவேண்டும் என்பதில் எவ்வளவு உறுதுணையாக இருந்தோம் என்பது அண்ணன் ஸ்டாலினுக்கு தெரியும். எனவே இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்க வேண்டாம். தேர்தலுக்குப் பின் இந்தக் கூட்டணியை கட்டிக்காக்கும் பொறுப்பு திமுகவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. இஸ்லாமியர், கிறிஸ்தவ வாக்குகள் 100 சதவீதம் திமுக கூட்டணிக்கு கிடைக்கவில்லை. அனைத்து தரப்பு வாக்குகளும் சிதறியது உண்மை. ஆனால், விசிகவுக்கான தலித் வாக்குகள் மட்டுமே சிதறியதால் தான் திமுக தோல்வியடைந்ததாக சொல்கிறார்கள். பாஜக 9 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4 சதவீத வாக்குகளையும் இழந்துள்ளது. திமுக, அதிமுகவின் நிலையான வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதெல்லாம் தலித் வாக்குகளா?. ஆனால் விசிகவுக்கு தான் இழப்பு ஏற்பட்டுள்ளது, தலித் வாக்கு வங்கி மட்டும் சரிந்துள்ளதாக அவதூறு பரப்புகிறார்கள். அனைத்து தரப்பு வாக்குகளும் சிதறியுள்ளதே உண்மை. இன்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று, அமைச்சரவை அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் இடத்தை விசிக எட்டியுள்ளது. இதனை பொறுக்க முடியாமல் அவதூறு பரப்புகிறார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்தவெகதிமுகதிருமாவளவன்விசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவிலேயே ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்
Next Article பெரம்பலூர்: திமுக – விசிக மோதல் – 120 பேர் மீது வழக்கு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்: விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் தம்பி விஜய் தனித்தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு எம்பி கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையையும்…

1 Min Read
அரசியல்

முதல்வர் விஜய்-ராகுல் காந்தி சந்திப்பு ரத்து: காரணம் சொன்ன காங்கிரஸ் எம்.பி.

முதல்வர் விஜய் மற்றும் ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் விளக்கம் அளித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க…

1 Min Read
தமிழ்நாடு

மேகதாது திட்டம்: 11 ஆண்டுகளாக போராடும் ஒரே கட்சி ம.தி.மு.க. – வைகோ

மத்திய அரசு மேகதாது அணை திட்டத்தை இயக்குவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 11 ஆண்டுகளாக இந்த திட்டத்தை தடுக்க ஒரே கட்சி ம.தி.மு.க. தான்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மக்கள் ஏன் வாக்களித்தோம் என வருந்துகின்றனர் – முதலமைச்சர் விஜய்யை ஸ்டாலின் விமர்சனம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் ஏன் வாக்களித்தோம் என வருந்துகின்றனர் என்றும், குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் குற்றம்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?