MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் ‘மாஸ்’ எடுபடாது – ஆர்.பி.உதயகுமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் ‘மாஸ்’ எடுபடாது – ஆர்.பி.உதயகுமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் ‘மாஸ்’ எடுபடாது – ஆர்.பி.உதயகுமார்

தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் ‘மாஸ்’ எடுபடாது – ஆர்.பி.உதயகுமார்

Fernandez
Last updated: செப்டம்பர் 22, 2026 7:53 காலை
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து பேசுகிறார்
தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் 'மாஸ்' எடுபடாது - ஆர்.பி.உதயகுமார்
SHARE

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வீசும் அலை குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'தாராபுரம் இடைத்தேர்தலில் இரட்டை இலை அலை வீசுவதை நேரில் காணும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு அதிமுக தொண்டருக்கும் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் பிறந்துள்ளது. எடப்பாடியார் தலைமையில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த அதிமுகவின் வெற்றி வேட்பாளர் பானுமதி, தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்பதை காண முடிகிறது. இது இரட்டை இலையின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்காளர்களை சந்திக்கிறார்' என்று கூறினார்.

இந்த உற்சாகமான சூழலுக்கு மத்தியில், ஆளும் தவெக அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை தேர்தல் களத்தில் உணர முடிவதாகவும் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார். 'தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் வாக்காளர்களும் விவசாயிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் சத்தியபாமா பல இடங்களில் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு செல்கிறார்' என்றும் அவர் தெரிவித்தார்.

தவெக வேட்பாளர் சத்தியபாமா பிரச்சாரம் செய்யச் சென்றபோது, பிஏபி பாசன விவசாயிகளும் பொதுமக்களும் அவரை வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்களுக்கு, உழைத்த கட்சிக்கு, தலைமைக்கு துரோகம் செய்த சத்தியபாமாவை தாராபுரம் வாக்காளர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இதற்கு அவர் செல்லும் இடங்களில் எழும் எதிர்ப்பு அலையே சாட்சியாக உள்ளது' என அவர் கடுமையாக விமர்சித்தார்.

தற்போதைய தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் ஆர்.பி.உதயகுமார் பட்டியலிட்டார். 'விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது, பிஏபி விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படாதது, மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளன. தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு 2500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்காதது, முதியோர் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்க உத்தரவு பிறப்பிக்காதது, நான்கு மாதங்களில் 40,000 கோடி கடன் வாங்கியிருப்பது என தவெக அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது' என்று அவர் கூறினார்.

மேலும், 'தன்னுடைய அனுபவக் குறைவால், நிர்வாகத் திறமையின்மையால், மக்கள் மீது அக்கறை காட்டாமல், அம்மா அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றி விழா நடத்துவதோடு கடமை முடிந்ததாக ஆளும் கட்சியினர் நினைக்கின்றனர்' என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

'நீதியை நிலைநாட்டி, தர்மத்தைக் காக்க தாராபுரம் தொகுதி மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அதிமுக தொண்டர்கள் எடப்பாடியார் தலைமையில் பணியாற்றுகிறார்கள். முதல்வர் விஜய்யின் 'மாஸ்' இந்தத் தேர்தலில் தவெகவிற்கு கை கொடுக்க வாய்ப்பே இல்லை என்ற கள நிலவரமே நமக்கு வந்து கொண்டிருக்கிறது' என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

'முதல்வர் விஜய்யின் முகத்தை ஒருமுறை காட்டினால் போதும் தவெகவுக்கு வெற்றி உறுதி என்ற நிலையிலிருந்து, அவர் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்தாலாவது ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியை சரிசெய்து வெற்றியை உறுதி செய்ய முடியுமா என்ற அடிப்படையில் தான், முதல்வர் விஜய் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்கியுள்ளார். தவெகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவையும், சவால்களையும், ஏற்படப்போகும் சறுக்கல்களையும் முதல்வர் விஜய்யின் மாஸ் பிரச்சாரம் சரிசெய்யும் என்ற நம்பிக்கையோடு தவெக தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்' என்றும் அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKBy-electionCM VijayRB UdhayakumarTharaipuramTVKTwo Leavesஅதிமுகஆர்.பி. உதயகுமார்இடைத்தேர்தல்இரட்டை இலைதவெகதாராபுரம்முதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்படுகிறது சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு: மாற்று நிலம் ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி
Next Article மென்மையான பாதங்களுக்கான வீட்டு வைத்தியம் பாதங்களை மென்மையாக்க எளிய வீட்டு வைத்தியம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிடும் காட்சி
தமிழ்நாடு

திமுகவினரின் ‘திரிஷா புருஷனை கண்டிக்கிறோம்’ கோஷம் வைரல்!

தஞ்சையில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 'திரிஷா புருஷனை கண்டிக்கிறோம்' என கோஷமிட்ட வீடியோ வைரலாகி, உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

ஊட்டி: வீட்டு மாடிகளில் உலா வந்த கரடி – மக்கள் பீதி

ஊட்டி நகரில், மழையில் நனைந்தவாறு வீட்டு மாடிகளில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

நிதியமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் சட்டசபையில்…

1 Min Read
சட்டப்பேரவையில் விவாதிக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிர்மல்குமார்
தமிழ்நாடு

பேரவையில் உதயநிதி, நிர்மல்குமார் இடையே காரசார விவாதம்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. குளியலறை குறித்த அமைச்சர் நிர்மல்குமார் கேள்விக்கும், உதயநிதி ஸ்டாலின் பதிலடியும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?