MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: ’அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ – சிபிஐ கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: ’அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ – சிபிஐ கண்டனம்

தமிழ்நாடு

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: ’அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ – சிபிஐ கண்டனம்

Admin
Last updated: மே 10, 2026 7:57 மணி
Admin
Share
SHARE

தவெக தலைவர் விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகிறது. இந்நிலையில் இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலத் தலைவர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார். குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பல்வேறு வழிகளில் நடந்த முயற்சிகளை முறியடிக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்தாலோசித்து வழங்கிய ஆதரவின் அடிப்படையில் இன்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும்.

“வந்தேமாதரம்” ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும்.

இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது.

நாளை சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை
Next Article IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆளுநர்-அரசு உறவில் நல்லுறவு மலர்கிறது!

தமிழ்நாட்டில் ஆளுநர்-அரசுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நல்லுறவின் புதிய தொடக்கம் அமைந்துள்ளது. இது மாநில வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி பிரதிநிதி நியமனம்: தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது குறித்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது…

2 Min Read
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அரசு நிர்வாகத் திறன் மற்றும் டாஸ்மாக் வருவாய் குறித்து முதல்வர் விளக்கம் அளித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?