MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்: விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் என்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்: விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்: விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் என்ன?

அரசியல்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்: விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் என்ன?

Admin
Last updated: மே 26, 2026 2:41 மணி
Admin
Share
SHARE

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இந்த திடீர் அரசியல் நகர்வு, திமுக, அதிமுக மட்டுமல்லாது காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் போன்ற கூட்டணிக் கட்சிகளிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு 'குதிரை பேர முயற்சி' என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்க்கு, தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காதது ஆரம்பத்தில் சங்கடத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தாலும், 5 ஆண்டு காலமும் அவர்களின் ஆதரவை மட்டுமே நம்பி இருக்க முடியுமா என்ற கேள்வி தவெகவுக்கு இருந்தது. இதனால், 'பிளான் பி'யாக அதிமுக அதிருப்தி அணியை அணுகியதாக கூறப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பிலிருந்து 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், அவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேச்சு அடிபட்டது.

இருப்பினும், கட்சித் தாவல் சிக்கல்கள் மற்றும் 'தூயசக்தி' என்ற கட்சி பிம்பத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால், வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களிடையே ஒருவித குழப்பம் நிலவி வந்தது. இந்த சூழலில், வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்எல்ஏக்கள் பழனிசாமி அணிக்கு திரும்பிய நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். ஏற்கெனவே அமமுக எம்எல்ஏ மன்னார்குடி காமராஜை தவெக தங்கள் பக்கம் இழுத்த நிலையில், தற்போது அதிமுகவில் இருந்து மூன்று எம்எல்ஏக்களை தட்டித் தூக்கியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், 'பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது, நம்பிக்கை வாக்கெடுப்புக்காக அதிமுகவின் ஓர் அணியை விலை பேசுவது, அமமுக உறுப்பினரை கொசுறு வாங்குவது, அதிமுக உறுப்பினர்களை பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது… இந்த மோசமான காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள் ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டுள்ளனர்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு என்றும் தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளது' என காட்டமாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தவெக, 'தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்' என விளக்கம் அளித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழகத்துக்கு வெளியே அதை எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை ஒருபோதும் எடுக்க முடியாது. குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது' எனக் கண்டித்துள்ளார். விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜியும், '3 சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் அறமற்றது; அவர்களை ஆதரிப்பது ஆபத்தானது. உண்மையான மற்றும் நேர்மையான அரசியலில் ஈடுபடுவோம் என்று தவெக தலைவர் விஜய் முன்வைக்கும் கூற்றுக்கு, இது ஓர் அச்சுறுத்தலாகும்' எனத் தெரிவித்துள்ளார். இடதுசாரிகளும் இந்த விவகாரத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே ஆட்சிக்கு போதுமானது எனும்போது, தவெக மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை அபகரிப்பது ஏன் என்று கூட்டணிக் கட்சிகளின் மத்தியில் கேள்வியெழுந்துள்ளது. தற்போது தவெக வசம் 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். திருச்சி கிழக்கு மற்றும் 3 காலியாகும் தொகுதிகளில் தவெக வென்றால் அவர்களின் பலம் 111 ஆக உயரும். ஏற்கெனவே அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ் கிட்டத்தட்ட தவெக நபராகிவிட்டார். எனவே, இன்னும் 6 அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தால் தனிப்பெரும்பான்மை பெறலாம், அதன்பின்னர் யார் தயவும் தேவையில்லை என்ற கணக்கோடு தவெக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் கூட்டணிக் கட்சிகளின் மனதில் எழுந்திருக்கிறது. அதிமுகவோடு நிற்காமல், தங்கள் பக்கமுள்ள எம்எல்ஏக்களுக்கும் வலைவீசுவார்களோ என்ற பதற்றமும் மற்ற கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை திட்டமிட்டு இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு ஆபத்தாகவே முடியும். தமிழக அரசியலில் புதிய 'பாய்ச்சல்' காட்டும் தவெக இதனை கவனத்தில் கொண்டால் நல்லது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu PoliticsVIJAYஅரசியல்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: ஏற்கக்கூடாது – இபிஎஸ் தரப்பு மனு
Next Article சிஎஸ்கேவில் மாற்றம் அவசியம்: சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஒடிசா மாநில மின்​னணு​வியல் மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்சர் முகேஷ் மகாலிங்

ஒடிசாவில் 50,000 கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு

ஒடிசாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 6,799 கிராம ஊராட்சிகளின் கீழ் வரும் சுமார்…

ஜூலை 31, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு…

ஜூலை 31, 2026

மத்திய பிரதேசத்தில் பாசிப்பயறு கொள்முதல் உயர்வு: விவசாயிகள் போராட்டம் வாபஸ்

மத்திய பிரதேச அரசு பாசிப்பயறு கொள்முதலை 60%…

ஜூலை 31, 2026

திரிணமூல் காங்கிரஸ் யாருக்கு சொந்தம்? – தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கடிதம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்ற…

ஜூலை 31, 2026

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு துணை: பிரதமர் மோடி உறுதி

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் 26 மாவட்டங்கள் பாதிப்பு,…

ஜூலை 31, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்: ஆளுநர் உரை வெளியீடு

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றினார். இதில் இருமொழிக் கொள்கை தொடரும், விவசாய கடன் தள்ளுபடி, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து வளர்மதி நீக்கம்: அடுத்த பரபரப்பு!

அதிமுகவில் இருந்து அமைப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி, நாளை டி.வி.கே (TVK) கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்

குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களின் உரை தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றும் அவர்…

1 Min Read
அரசியல்

சென்னை ரயில்வே: 150 கி.மீ. தண்டவாளப் புனரமைப்பு இலக்கு!

சென்னை ரயில்வே கோட்டம் இந்த நிதியாண்டில் 150 கி.மீ. தண்டவாளங்களை புதுப்பிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது ரயில்களின் பாதுகாப்பு மற்றும் வேகத்தை அதிகரிக்கும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?