MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழகத்தில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: மழை எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: மழை எச்சரிக்கை!

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: மழை எச்சரிக்கை!

Admin
Last updated: ஜூலை 3, 2026 6:35 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால், மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேசப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, இன்று (ஜூலை 3) வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதன் தாக்கத்தால், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், மற்ற தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 3) தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல், ஆந்திர கடலோரப் பகுதிகள் போன்ற இடங்களில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் குறிப்பிட்ட கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Weatherஎச்சரிக்கைகாற்றழுத்த தாழ்வுப்பகுதிதமிழ்நாடுமழைவானிலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்தில் செல்வது குதிரை பேரம் அல்ல – பிரவீன் சக்கரவர்த்தி
Next Article புதிய டிசைனில் பொங்கல் வேட்டி, சேலை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு

தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டு புகார் தொடர்பாக, மின்துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் பா.மணிமாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த தி.மு.கழக…

2 Min Read
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு ஏற்பாடுகளுடன் ஆன்மீக நிகழ்வு கோலாகலமாக நடந்தது.

1 Min Read
தமிழ்நாடு

ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் – நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால், தான் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 'கட்டா குஸ்தி 2' படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.…

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளை அறிக்கை: தமிழக அரசின் நிதிநிலை குறித்து அண்ணாமலை விமர்சனம்

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை விமர்சித்த அண்ணாமலை, கடன் சுமை, வருவாய் இழப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?