MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழகத்தில் 14 நாட்களில் 1,328 குற்றவாளிகள் கைது: டிஜிபி தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > தமிழகத்தில் 14 நாட்களில் 1,328 குற்றவாளிகள் கைது: டிஜிபி தகவல்
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் 14 நாட்களில் 1,328 குற்றவாளிகள் கைது: டிஜிபி தகவல்

Admin
Last updated: June 14, 2026 10:29 am
Admin
Share
SHARE

தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் மட்டும் 1,328 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். குற்றப் பின்னணி கொண்ட 36,740 பேர் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் சிறப்பு அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார், போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகள் மீது இ.கா.ப. திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடந்த மே 28 முதல் ஜூன் 10 வரை நடைபெற்ற சோதனைகளில், 36,740 பேர் சோதனை செய்யப்பட்டதில், 1,328 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

மேலும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை 2,939 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 231 கிலோ கஞ்சா, 4,073 மாத்திரைகள், 22.55 கிராம் மெத்தாம்பெட்டமின், 362.5 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 17 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், தொடர் குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாலியல் பாதுகாப்புச் சட்டம் (POCSO) தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கு மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Crimeகுற்றவாளிகள் கைதுசட்டம் ஒழுங்குடிஜிபி மகேஷ் குமார் அகர்வால்தமிழ்நாடு காவல்துறைபோதைப்பொருள் தடுப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உலகக் கோப்பை கால்பந்து: ஸ்காட்லாந்து அணி வெற்றி
Next Article மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமித் ஷா மூளையாக செயல்பட்டார்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களின் சட்டவிரோத பிரிவுக்கு மூளையாக செயல்பட்டது அமித் ஷா தான்…

June 15, 2026

ராஜஸ்தானில் பயங்கர மணல் புயல்: ரெட் அலர்ட் அறிவிப்பு

ராஜஸ்தான் மற்றும் டெல்லியை புரட்டிப் போட்ட பயங்கர…

June 15, 2026

அமெரிக்கா – ஈரான் மோதல் முடிவுக்கு வருவதை வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல்…

June 15, 2026

அயோத்தி ராமர் கோயில்: பிரதமர் நட்ட மரம் காணாமல் போனது சர்ச்சை!

அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி நட்ட…

June 15, 2026

ரயிலில் தீ விபத்து வதந்தி: தண்டவாளத்தில் குதித்து 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக…

June 15, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மேயர் சர்ச்சை: ஆதவ் அர்ஜுனாவுக்கு பாரதி பதிலடி

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பல்லவியை அவமதித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு. இதற்கு திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து விவாதம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரிஷபம்: தடைகள் நீங்கி, வெற்றி பெறும் நாள்!

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, இன்று தடைகள் விலகி, உச்சத்தை தொடும் நாள். புத்திசாலித்தனமான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். அலுவலகப் பணிகளும் துரிதமாக நடைபெறும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மிதுனம் ராசி: இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று சேமிப்பு உயரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீடு வாங்கும் திட்டங்கள் வெற்றி பெறும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பழனி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது மனைவியுடன் பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பக்தர்களிடையே அவரது வருகை பெரும் வரவேற்பைப் பெற்றது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?