MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்” – திமுக தலைவர் ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்” – திமுக தலைவர் ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - “புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்” – திமுக தலைவர் ஸ்டாலின்

லைஃப் ஸ்டைல்

“புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்” – திமுக தலைவர் ஸ்டாலின்

Admin
Last updated: மே 9, 2026 5:55 மணி
Admin
Share
SHARE

சென்னை: “மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மாநிலம் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வார். இதனால், பெரும்பான்மைக்கு 11 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களுடன் முதலில் ஆதரவு தந்தது. பின்னர், சிபிஐ, சிபிஎம் தனது ஆதரவை அளித்தன. இதனையடுத்து தவெகவுக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவைப்பட்டது.

இந்தச் சூழலில், மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பின்னர் இன்று விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவைக் கொடுத்துள்ளது.

ஆக, மொத்தம் 120 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது தவெக. அடுத்தக்கட்டமாக ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகளை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.

ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.

நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள்.

அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.

ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.

எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது.

அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து திமுகவுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.

தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.

மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article VIDEO: வெள்ளரிக்காய்க்கு பெயிண்ட் அடித்து சிக்கிய பெண்கள்
Next Article சென்னை – கன்னியாகுமரி இடையே கோடை கால சிறப்பு ரெயில்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

ஆன்மிகம்லைஃப் ஸ்டைல்

“தவெக-வை புறக்கணித்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது”- நாஞ்சில் சம்பத்

தமிழக வெற்றி கழக பிரிவு செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:- வஞ்சகம், வன்மம், வக்ரம், அநீதி, அநியாயம், அக்ரமம், சூது, வாது,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தஞ்சையில் 27 பெருமாள்கள் கருடசேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தஞ்சையில் நடைபெற்ற பிரம்மாண்ட கருடசேவை வைபவத்தில், 27 பெருமாள்கள் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளியதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிளாப் ஆன படத்துடன் அண்ணாமலையை ஒப்பிட்ட அமைச்சர் அருண்ராஜ்

தமிழக மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்று வரும் தலைமைக்கு எதிராக எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், மக்கள் அளிக்கும் ஆதரவே இறுதியில் வெற்றி பெறும் என அமைச்சர் அருண்ராஜ்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சிம்ம ராசி: ஜூன் 8, 2026 – இன்றைய ராசிபலன்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அலைபேசி வழி தகவலால் அனுகூலம் கிட்டும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?