கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படாததால், சிலர் அதிருப்தியில் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், 'கட்சியின் ஆரம்ப காலம் முதல் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. பலர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த பதவி கிடைக்காததாலும், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி நடத்திய மகளிரணி கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே தொடர்கிறேன்' என்று கூறினார்.
பதவி கிடைக்காததால் த.வெ.க சென்றனர்: எஸ்.பி.வேலுமணி

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
கருத்துகள் இல்லை
Stay Connected
சமிபத்திய செய்திகள்
சற்றுமுன்
திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சாமி தரிசனம் செய்ய…
அயோத்தி ராமர் கோயில்: அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்
அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை…
ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான சொத்து…
புதிய இளைஞர் இயக்கம் உதயம்: சமூக மாற்றத்திற்கு களம் இறங்கும் புதிய தலைமுறை
சமூக மாற்றத்திற்காக ஒரு புதிய இளைஞர் இயக்கம்…
பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃபுக்கு நோட்டீஸ்
மகாராஷ்டிராவில் பான் மசாலா விற்பனைக்கு தடை உள்ள…