MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் இருந்து விலகும் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுகவில் இருந்து விலகும் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்?
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து விலகும் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்?

Admin
Last updated: June 30, 2026 3:24 pm
Admin
Share
SHARE

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் தொகுதி எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தனது ஆதரவாளர்களுடன் எஸ்.பி. வேலுமணி சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்க மறுத்ததால் தேர்தலில் பெரும் தோல்வி ஏற்பட்டதாகவும் அவர் உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதவி வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும், தற்போது தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் 'டம்மி' பதவி குறித்தும் வேலுமணி கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலர் விலகிச் சென்றுள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணியும் கட்சியிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. தமிழக வெற்றி கழகம் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சரும், நத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதனும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஅரசியல்எஸ்.பி.வேலுமணிதமிழ்நாடு அரசியல்நத்தம் விஸ்வநாதன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink1
Previous Article போலியோ சொட்டு மருந்து ரீல்ஸ்: த.வெ.க. ஒன்றிய செயலாளர் தற்காலிக நீக்கம்
Next Article பாலியல் குற்றவாளிகளுக்கு ‘கலர் கோடு’: தவெக அரசு புதிய திட்டம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச அப்டேட் மற்றும் ரயில் டிக்கெட்…

June 30, 2026

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர்…

June 30, 2026

ஏர் இந்தியா: டெல்லி-மெல்போர்ன் விமான சேவை நாளை முதல் தொடக்கம்

ஏர் இந்தியா, டெல்லி-மெல்போர்ன் இடையே மேம்படுத்தப்பட்ட Boeing…

June 30, 2026

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 துப்பாக்கிகள் காணாமல் போனது

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 உரிமம்…

June 30, 2026

நாளை முதல் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு இல்லை

மத்திய அரசு நாளை முதல் பெட்ரோல், டீசல்…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நெருக்கடி நிலை எதிர்ப்பு: சிறை சென்ற பெண்களை வானதி சீனிவாசன் நினைவு கூர்ந்தார்

நெருக்கடி நிலை எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்ற பெண்களை வானதி சீனிவாசன் நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்வது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2…

1 Min Read
தமிழ்நாடு

வார விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

வார விடுமுறையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில்…

1 Min Read
தமிழ்நாடு

ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து

கோவை ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடியை ரத்து செய்துள்ளது. இதற்கு பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?