முதலமைச்சர் விஜயுடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க நிர்வாகிகள் சந்திப்பு

முதலமைச்சர் ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, “தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு” தொடர்பாக ரூ.317 கோடி நிலுவைத் தொகையாக இருப்பதாகவும், அதனை ஒன்றிய அரசிடம் பேசி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிலுவைத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத் தர தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version