MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?

அரசியல்

சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?

Admin
Last updated: மே 25, 2026 3:34 மணி
Admin
Share
SHARE

சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் மற்றும் ஜல்ஜீவன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், குடிநீர் பற்றாக்குறை நீடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைத்து இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சிவகங்கை நகராட்சி, திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, சிங்கம்புணரி ஆகிய 4 பேரூராட்சிகள் மற்றும் 779 கிராமப்புற பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் எஸ்.புதூர் ஒன்றியம் இணைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கென பிரத்யேகமாக ரூ.2,119.07 கோடியில் தொடங்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் கடந்த 2021 பிப்ரவரியில் தொடங்கி, இந்த ஆண்டு ஜனவரி 31 அன்று பயன்பாட்டிற்கு வந்தன. இத்திட்டத்தில் காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை, மானாமதுரை நகராட்சிகள் மற்றும் ஏற்கனவே ராமநாதபுரம் திட்டத்தில் இருந்த சிவகங்கை நகராட்சி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய திட்டத்தின் மூலம் 16.12 லட்சம் மக்களுக்கு தினமும் சராசரியாக 86.42 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ளூர் குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரை 2,53,781 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து சிவகங்கை சமூக ஆர்வலர் ராஜாராமன் கூறுகையில், 'புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும், ஆங்காங்கே குழாய் உடைப்புகள் ஏற்படுகின்றன. மேலும், ஜல்ஜீவன் திட்டத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன. பல இடங்களில் குழாய்கள் சரியாக பதிக்கப்படவில்லை. இணைப்புகள் வழங்கப்பட்ட கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுடன் முறையாக இணைக்கப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, தண்ணீர் விநியோகத்தில் உள்ள தடைகளை நீக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜல்ஜீவன் திட்டப் பணிகள் முழுமையாக முடியவில்லை. நிதி ஒதுக்கீடு வராததால் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க முடியவில்லை. இதனால் அவர்கள் பணியை தாமதப்படுத்துகின்றனர். இதன் காரணமாக, தற்போதுள்ள நடைமுறைகளின்படியே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது' என்று விளக்கமளித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SivagangaWater Crisisகாவிரி கூட்டுக் குடிநீர்குடிநீர் பிரச்சினைசிவகங்கைதமிழ்நாடுஜல்ஜீவன் திட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பொருளாதார தாக்குதல் – ராமதாஸ் கண்டனம்
Next Article பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை – முதல்வர் விஜய் அதிரடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் காட்சி
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6,250 கன அடிக்கு உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,250 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

வெற்றி அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை: சீமான் விமர்சனம்

தவெக அரசின் நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கை என சீமான் விமர்சனம். முக்கிய துறைகளுக்கு நிதி குறைப்பு, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து கண்டனம்.

3 Min Read
அரசியல்

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி தடுக்கப்பட்டது – சிபிஎம் பெ.சண்முகம்

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக கட்சி…

2 Min Read
அரசியல்

17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: அமுதா உணவுத்துறை செயலா்!

தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பி.அமுதா உணவுத்துறை செயலா் ஆகவும், ஜி.எஸ். சமீரன் சென்னை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?