MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அமைச்சரா? சீமான் கேள்வி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அமைச்சரா? சீமான் கேள்வி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அமைச்சரா? சீமான் கேள்வி!

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அமைச்சரா? சீமான் கேள்வி!

Admin
Last updated: ஜூலை 7, 2026 6:39 காலை
Admin
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம் என்றும், நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு என்றும் தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? என்றும் சீமான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன.

தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன், அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்? என்று சீமான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா?

தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகள் மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:EducationTamil Nadu Politicsஅரசு பள்ளிகள்கல்வித்துறைசீமான்தனியார் பள்ளிகள்நாம் தமிழர் கட்சிராஜ்மோகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இன்றைய ராசிபலன் 07-07-2026 இன்றைய ராசிபலன்: 07-07-2026 – காரிய அனுகூலம், சில எதிர்மறை நிகழ்வுகள்!
Next Article எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்கும் உணவுகள் பற்றிய தகவல் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் உணவுகள்: எச்சரிக்கையுடன் இருங்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் தேர்வுக்காக படிக்கும் மாணவர் சூரஜ் சுபாஷ் ஷிண்டே

நீட் தேர்வு: மருத்துவராக ஆசைப்பட்ட மாணவர் தற்கொலை – மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த 19 வயது மாணவர் சூரஜ் சுபாஷ்…

ஆகஸ்ட் 21, 2026

மகாராஷ்டிராவில் சோகம்: மொபைல் கேட்டு தற்கொலை செய்த மகன், அவரைத் தொடர்ந்து பெற்றோரும் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், புதிய மொபைல்…

ஆகஸ்ட் 21, 2026

காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா: டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தொடர்பாக…

ஆகஸ்ட் 21, 2026

குஜராத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7…

ஆகஸ்ட் 21, 2026

ராகுல் காந்தி நாடகம்: ஜே.பி.நட்டா விமர்சனம்

ஊடக வெளிச்சத்துக்காக ராகுல் காந்தி நாடகம் நடத்துவதாக…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

மெட்ராஸ் முதல் தமிழ்நாடு வரை: முதல்வர் ஸ்டாலின் பெயர் மாற்ற வரலாறு!

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1956 முதல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றே நீடித்த நிலப்பரப்பு, அண்ணாதுரையின் முழக்கத்தால் 'தமிழ்நாடு' ஆனது. இதன் வரலாற்றை முதல்வர் ஸ்டாலின் விளக்கி அறிக்கை…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆளுநர் உரையில் ரூ.2500 அறிவிப்பு எங்கே? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

ஆளுநர் உரையில் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கும் அறிவிப்பு இடம்பெறாதது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்தும்…

1 Min Read
சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு மரியாதை மறுப்பு: உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனம்

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நுழையும்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்ததாகக் கூறப்படும் காணொளி வைரலாகி, அரசியல் நாகரிகம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை: 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை குற்றவாளிகள் மீண்டும் இது போன்ற…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?