MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நதிகள் இணைப்புத் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நதிகள் இணைப்புத் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நதிகள் இணைப்புத் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தமிழ்நாடு

நதிகள் இணைப்புத் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 6, 2026 7:47 மணி
Fernandez
Share
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதுவது
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
SHARE

கோதாவரி-காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஒரு விரிவான கடிதத்தை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் நீர் ஆதாரப் பற்றாக்குறை மற்றும் மாநிலத்தின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்ள சவால்களை இந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கடிதத்தில், தமிழ்நாடு இயல்பாகவே மேற்பரப்புநீர் வளங்களில் பற்றாக்குறை கொண்ட மாநிலம் என்றும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்திருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசு தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டியுள்ளது என்றும், பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்வதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மேற்பரப்புநீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாக கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது என்றும், தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் போன்ற தென் மாவட்டங்கள் தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அம்மாவட்டங்களின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி-காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியம் என்றும், இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA) கோதாவரி-பெண்ணாறு-பாலாறு-வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தற்போதுள்ள DPRயில் உள்ள சீரமைப்பு வழி, காவிரி ஆற்றிற்கு சில கிலோமீட்டர் முன்னதாகவே முடிவதால், அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி-காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளைத் தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார். சமூகப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட, அதற்கு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்” என்ற அந்தஸ்தை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு மற்றும் குறித்த காலத்தில் திட்டத்தை முடிப்பது ஆகிய நோக்கத்திற்காக, ஒன்றிய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் ஒரு பிரத்யேக ‘சிறப்பு நோக்கு அமைப்பை’ (Special Purpose Vehicle) உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் என்றும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்புடன் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

எனவே, ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கும் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு இந்தியப் பிரதமர் அவர்களை முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்: i. தொடர்புடைய மாநிலங்களுடன் பயன்பெறும் ஆலோசனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். ii. காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான அறிக்கையை (DPR) இறுதி செய்யவேண்டும்; iii. இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விரைவான முறையில் (Fast Track Method) அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல்; மற்றும் iv. இத்திட்டத்தை ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்திட ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை நிறுவுவது குறித்துப் பரிசீலிப்பது மற்றும் இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்தல். இத்திட்டம் தொடர்பாக இந்தியப் பிரதமர் அவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி, தென்னிந்தியாவின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது சிறப்பான நீர் வளங்களைச் சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவது என்ற தேசிய குறிக்கோளை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CM VijayGodavari Cauvery GuntakariPM ModiRiver LinkingTamil NaduWater Managementகோதாவரி-காவிரி-குண்டாறுதமிழ்நாடுநதிகள் இணைப்புநீர் மேலாண்மைபிரதமர் மோடிமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அமைச்சர் விக்னேஷ் மதுபானம் விநியோகம் குறித்து விளக்கம் அளிக்கிறார் ஆன்லைனில் மதுபானம் விற்பனை தவறு: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
Next Article திருச்செந்தூர் அருகே நடந்த சாலை விபத்து திருச்செந்தூர் அருகே கார் மோதி ஒருவர் பலி: ஒருவர் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தொடர்பான கைது நடவடிக்கை

மும்பையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது

மும்பையில் சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்…

ஆகஸ்ட் 6, 2026

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் 'வரி…

ஆகஸ்ட் 6, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.5.46 கோடி குவிந்தது: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஆகஸ்ட் 6, 2026

ஜார்க்கண்ட் அரசு பணி தேர்வு முறைகேடு: மாணவர்கள் போராட்டம் 12வது நாள்

ஜார்க்கண்ட் அரசு பணி நியமனத் தேர்வில் முறைகேடு…

ஆகஸ்ட் 6, 2026

வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

மங்களூருவில் வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன்…

ஆகஸ்ட் 6, 2026

You Might Also Like

அமைச்சர் ரமேஷ் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்
தமிழ்நாடு

திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்

திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

தனிமைப்படுத்தி பாலியல் தொல்லை: 3 பேர் கைது

தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண் போலீஸ் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 Min Read
தமிழ்நாடு

மின்கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தல் – ராமதாஸ்

மின்கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் மற்றும் தொழில் துறையை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும்…

0 Min Read
டாஸ்மாக் பார் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ்
தமிழ்நாடு

டாஸ்மாக் பார் டெண்டர்: கால அவகாசம் நீட்டிப்பு?

டாஸ்மாக் பார் டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு குறித்து அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை நடத்தினார். 6 வாரங்கள் வரை நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்களை மூடினால்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?