உலர் திராட்சையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். குறிப்பாக, முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த திராட்சையை சாப்பிடுவது பல மருத்துவ குணங்களை வழங்குகிறது. இந்த ஊறவைத்த உலர் திராட்சையால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
1. ரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பு: உலர் திராட்சையில் உள்ள தாமிரச் சத்துக்கள், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. இது ரத்த சோகை போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.
2. எலும்பு மஜ்ஜை வலுப்பெறும்: ஊறவைத்த உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் எலும்பு மஜ்ஜைகள் வலுப்பெற்று, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
3. சீரான இதயத் துடிப்பு: இந்த திராட்சையை அன்றாடம் உட்கொள்வது இதயத் துடிப்பைச் சீராக்க உதவுகிறது. மேலும், இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நல்லது. இதை ஊறவைத்து சாப்பிட்டு வர இருதய நோயின் அபாயத்தையும் பெருமளவு குறைக்கலாம்.
4. கருவில் உள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து: கர்ப்பிணிப் பெண்கள் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிட்டால், கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
5. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை: ஊறவைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
6. இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்: இதில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க பெரிதும் உதவுகிறது.
7. எலும்புகள் வலுவடையும்: உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்த முக்கியப் பங்கு வகிக்கின்றன.
8. மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு: சில பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஊறவைத்த உலர் திராட்சை நன்மை பயக்கும்.
9. உடல் எடை குறைப்புக்கு உதவும்: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 ஊறவைத்த உலர் திராட்சையை எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

