MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போலீஸ் தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு – தம்பி குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போலீஸ் தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு – தம்பி குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - போலீஸ் தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு – தம்பி குற்றச்சாட்டு

தமிழ்நாடு

போலீஸ் தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு – தம்பி குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 24, 2026 11:25 காலை
Fernandez
Share
உயிரிழந்த அருணாச்சலத்தின் தம்பி சுடலைமணி செய்தியாளர் சந்திப்பு
உயிரிழந்த அருணாச்சலத்தின் தம்பி சுடலைமணி
SHARE

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் காவல் துறையினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி அமுதநகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (24), அரசு மதுபானக்கடையுடன் இணைந்த மதுபானக் கூடத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். கடை மூடிய பிறகு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 17-ஆம் தேதி, அருணாச்சலம் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தாளமுத்து நகர் காவல் நிலைய காவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் என நான்கு பேர் அவரை 120 மதுபாட்டில்களுடன் கைது செய்தனர்.

தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர், அவரை சிறையில் அடைப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் தகுதி சான்றிதழ் பெற ஆஜர்படுத்தியுள்ளனர். நீதிமன்றம் அழைத்துச் செல்வதற்கு முன்பு, தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் அடைக்கப்படும் அறையில் மற்ற கைதிகளுடன் அவரும் வைக்கப்பட்டிருந்தார்.

அப்போது, அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும், இதில் அவரது தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, குடும்பத்தினர் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட அருணாச்சலத்தை காவல்துறையினர் சொந்த ஜாமினில் விடுவிக்கவும் உத்தரவிட்டனர்.

தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலத்திற்கு, பின்தலையில் ஏற்பட்ட காயத்தால் இரத்தக் கசிவு அதிகமாக இருந்ததால், கடந்த 21-ஆம் தேதி தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் உயிரிழந்தார்.

இதையடுத்து, அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு, அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அருணாச்சலத்தின் தம்பி சுடலைமணி, தனது அண்ணனுக்கு எந்த நோயும் கிடையாது என்றும், காவல்துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட காயமே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

'எனது அண்ணன் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். அவருக்கு இதுவரை எந்த நோயும் கிடையாது. காவல் துறையினர் தாக்கியதால்தான் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து எங்களுக்குத் தகவல் அளித்தனர். சொந்த ஜாமினில் காவல்துறையினர் அவரை விடுவித்தனர். தலையில் இருந்த காயம் காரணமாக இரத்தக் கசிவு அதிகமாக ஏற்பட்டது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறினர். அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நன்றாக இருந்த எனது அண்ணன் திடீரென்று இன்று காலை உடல்நிலை மோசமாகி இறந்து விட்டார். இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம். எனது அண்ணன் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். நீதித்துறை நடுவர் முன்னிலையில் இந்த பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இதில், தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Police AssaultThoothukudiஅருணாச்சலம்உயிரிழப்புகாவல்துறை தாக்குதல்சட்டவிரோத மது விற்பனைசுடலைமணிதூத்துக்குடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மீன்வள பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியல் வெளியீடு மற்றும் கலந்தாய்வு அறிவிப்பு மீன்வள பல்கலைக்கழக தரவரிசை வெளியீடு: கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரம்
Next Article சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளதை குறிக்கும் அறிவிப்பு பலகை தங்கம் விலை சரிவு: நகை பிரியர்களுக்கு நிம்மதி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மத்திய அரசுக்கு அவகாசம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு…

ஜூலை 24, 2026

டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி சமாதிக்கு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தம்

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சி…

ஜூலை 24, 2026

சிஜேபி உடனான பேச்சுவார்த்தை: ஜே.பி.நட்டா விளக்கம்

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம்…

ஜூலை 24, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் – கரப்பான் பூச்சி கட்சி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்…

ஜூலை 24, 2026

வினாத்தாள் கசிவு: மத்திய அரசு – சிஜேபி பேச்சுவார்த்தை

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா…

ஜூலை 24, 2026

You Might Also Like

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நிர்வாக சீரமைப்புக்கு குழு அமைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார். கட்சி நிர்வாகத்தை மறுசீரமைக்க குழுக்களை அமைத்து, தொண்டர்களுக்கு உற்சாக கடிதம் எழுதியுள்ளார்.

2 Min Read
சென்னையில் நடைபாதை வசதி குறித்த ஆய்வு
தமிழ்நாடு

நடைபாதை வசதி: சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

உலகெங்கிலும் நகரங்கள் நடைபாதை வசதிகளை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. சென்னை மாநகரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இது குறித்த ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் ஆதரவு இல்லை! தவறு செய்தால் தண்டனை உறுதி – அமைச்சர் ஜெகதீஸ்வரி

விருதுநகரில் நடந்த சிலம்ப விழாவில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, கட்சி நிர்வாகிகள் மீதான புகார்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும், தவறு செய்தால் முதல்வர் ஆதரவு இருக்காது என்றும்…

1 Min Read
தமிழ்நாடு

சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்

புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள் முறைகேடாக எந்த பொருளும் வர அனுமதிக்கப்படாது என்றும், போதைப்பொருள் புழக்கத்தை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?