MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெரம்பலூர் அருகே கார்-ஆம்னி பஸ் மோதல்: 4 பேர் பரிதாப பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெரம்பலூர் அருகே கார்-ஆம்னி பஸ் மோதல்: 4 பேர் பரிதாப பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெரம்பலூர் அருகே கார்-ஆம்னி பஸ் மோதல்: 4 பேர் பரிதாப பலி

தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே கார்-ஆம்னி பஸ் மோதல்: 4 பேர் பரிதாப பலி

Fernandez
Last updated: செப்டம்பர் 24, 2026 11:03 காலை
Fernandez
Share
பெரம்பலூர் அருகே கார்-ஆம்னி பஸ் மோதல் விபத்து நடந்த இடம்
பெரம்பலூர் அருகே கார்-ஆம்னி பஸ் மோதல் நடந்த விபத்து பகுதி
SHARE

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், கார் மற்றும் ஆம்னி பஸ் மோதி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம் இன்று (செப் 24) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த ஏழு பேர் பயணித்த கார், முன்னால் சென்ற ஏ.வி.கே. ஆம்னி பஸ்ஸின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம், பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (30), முதுகுளத்தூர் அம்மாசி மகன் கார்த்திக் (38), கண்ணாயிரம் மகன் காளீஸ்வரன் (25) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த கண்ணதாசன் (22), கார்த்தியின் மனைவி சூர்யா (35), தேவிபட்டினம் சபரிகன் மகன் ஜான் கென்னடி (35), ரவி மனைவி சரண்யா (23) ஆகியோர் மீட்கப்பட்டு, பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மற்ற மூவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பஸ்ஸின் ஓட்டுநர், தூத்துக்குடி மாவட்டம், நாசரேட் பகுதியைச் சேர்ந்த ராஜசீலன் (45) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் நின்றன.

விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்ஸில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குச் சென்ற 34 பயணிகளும், மாற்றுப் பேருந்து மூலம் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Car AccidentOmni BusPerambalurRoad Accidentஆம்னி பஸ்கார் விபத்துசாலை விபத்துபெரம்பலூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் தோசை சுடுகிறார் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தோசை சுட்ட வீடியோ வைரல்
Next Article தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற தசரா திருவிழா ஆலோசனைக்கூட்டம் குலசேகரப்பட்டினம் தசரா: மாவட்ட ஆட்சியர் தலைமையில் முக்கிய ஆலோசனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேர்தல் ஆணைய அலுவலகம்

படிவம் 6 மாற்றம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6-ல் தேர்தல் ஆணையம் செய்த மாற்றங்கள் குறித்த…

செப்டம்பர் 24, 2026

கண்ணூரில் பயங்கர விபத்து: பேருந்து மோதி 2 கல்லூரி மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்பு!

கேரள மாநிலம் கண்ணூரில் பேருந்து மோதி 2…

செப்டம்பர் 24, 2026

தோஷம் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்; கர்ப்பம்

மகாராஷ்டிராவில் தோஷங்கள் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல்…

செப்டம்பர் 24, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலக ராகுல் காந்தி கோரிக்கை

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக…

செப்டம்பர் 24, 2026

காவிரி நீர் பற்றாக்குறை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரில்…

செப்டம்பர் 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியீடு – அமைச்சர் நிர்மல்குமார்

மின்சாரத்துறை சார்பில் அடுத்த வாரத்தில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், வெளிப்படையான இணையதளம் 10 நாட்களுக்குள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.

1 Min Read
போளூர் ரயில்வே கேட் அருகே தற்கொலை செய்து கொண்ட தம்பதி உடலை காவல்துறையினர் ஆய்வு செய்கின்றனர்
தமிழ்நாடு

போளூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

திமுக தனித்து போட்டியிட வேண்டும்: ஆ.ராசா கோரிக்கை

திமுக தனித்து போட்டியிடும் என அறிவிக்க வேண்டும் என்றும், 234 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை…

1 Min Read
பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம் தேவையில்லை – அரசு விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார். வீரியம் குறைந்த ஆர்.எப்.5 வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால்,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?