MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

தமிழ்நாடு

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

Admin
Last updated: ஜூன் 26, 2026 6:31 காலை
Admin
Share
SHARE

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து, புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் அம்மனை வழிபட்டார். ஆதிசங்கர பீடத்திற்கு சென்றபோது, கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்களும் பழங்களும் வழங்கப்பட்டன. பதிலுக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சங்கராச்சாரியார்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் நிற சால்வைகளை பரிசளித்தார். இதைத் தொடர்ந்து தீப ஆராதனையும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'தமிழ்நாடு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும்' என்ற அறிவிப்பை வரவேற்றுப் பேசினார். எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதே பிரதமரின் நிலைப்பாடு என்றும், இதற்கு முன்பும் தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் முறையாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடி போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட்ட பெரிய திட்டங்கள் உட்பட பல முக்கிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், தற்போதும் தமிழகத்திற்கு உரிய நிதி உதவிகள் கட்டாயம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சட்டமன்றத்தில் தற்போதைய முதல்வர் முன்னாள் முதல்வரை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், 'அரசியல் விமர்சனங்களை சட்டமன்றத்தில் செய்யாவிட்டால் எங்கே செய்வார்கள்? எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் விவாதிப்பதில் தவறில்லை' என்று கருத்து தெரிவித்தார். மாநில அரசுகளின் கடன் சுமை அதிகரிப்பது குறித்த கேள்விக்கு, 'கடன் வாங்குவதன் மூலம் பொதுமக்களுக்கான சொத்துக்களை உருவாக்கி, அவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் அளிக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும், அவை நீண்ட காலத்திற்குப் பயன்படும் வகையில் அமைய வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள் பெருகி, அப்பகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்படும்' என விளக்கினார்.

மேலும் அவர் கூறுகையில், 'வாங்கிய கடனைக் கொண்டு என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். நீங்கள் சொத்துக்களை உருவாக்குகிறீர்களா, அதன் மூலம் கல்வி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் பெருகுகின்றனவா? அவ்வாறு இருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள். பிரதமர் சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற மூலதனச் செலவு திட்டங்களைச் செயல்படுத்துகிறார். ஆனால் சில மாநில அரசுகள் வருவாய் செலவினங்களில் மட்டும் கவனம் செலுத்துகின்றன. மக்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுப்பது, ஊதியத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளைச் செய்யலாம். ஆனால் நிதிநிலைமை குறைவாக இருக்கும்போது, வாங்கிய கடனை நல்ல சொத்துக்களை உருவாக்கச் செலவிட வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:PoliticsTamil Naduகாஞ்சி காமாட்சி அம்மன் கோயில்தமிழ்நாடுநிதிநிலைநிர்மலா சீதாராமன்மத்திய அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து: அமைச்சர் உத்தரவு
Next Article இன்றைய ராசி பலன்: தந்தையின் மகிழ்ச்சிக்கு காரணமாவீர்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் உரையாற்றுகிறார்

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகளுக்கு மத்திய அரசு…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கர விபத்து: 9 பக்தர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி…

நவம்பர் 22, 2026

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோவில் உண்டியல்: ரூ.1½ கோடி குவிந்தது

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1½ கோடி ரொக்கமும், தங்கம் 603 கிராம், வெள்ளி 5 கிலோ 780 கிராமுக்கு மேல் வசூலாகியுள்ளது. கோவில் நிர்வாகம்…

1 Min Read
பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்தது
தமிழ்நாடு

பேனா நினைவுச் சின்னம்: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யாமல் கால அவகாசம் பெறுவதாக பசுமை தீர்ப்பாயம்…

2 Min Read
முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திப்பு
இந்தியா

காவிரி நீர் பிரச்சினை: பேசித் தீர்க்க தேவகவுடா வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் தேவகவுடா, தமிழக முதலமைச்சர் விஜயை பாராட்டியதோடு, காவிரி நீர் பிரச்சினையை இரு மாநிலங்களும் பேசித் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலியில் நாளை மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணி அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (16.5.2026) பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?