MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்

இந்தியா

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்

Admin
Last updated: மே 11, 2026 4:17 மணி
Admin
Share
SHARE

பெங்களூரு: பிரதமர் மோடி நேற்று கர்நாடகா சென்றிருந்த நிலையில், அவர் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கலந்து கொள்வதற்காக கர்நாடகா வந்திருந்தார் பிரதமர் மோடி. அப்போது, வாகன அணிவகுப்பு பெங்களூரு புறநகர் பகுதியான நைஸ் ரோடு (NICE Road) சந்திப்பு வழியாகச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு இரண்டு ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், அந்த ஜெலட்டின் குச்சிகளைப் பத்திரமாக மீட்டனர்.

இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, டெல்லியிலிருந்து தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் பெங்களூரு விரைந்துள்ளனர். அவர்கள் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தற்போது வரை இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பாதுகாப்பு குறைபாடா அல்லது சதி வேலையா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதலமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா
Next Article ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அழுதபடியே பதவியேற்ற எம்.எல்.ஏ.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விமானப் பணிக்குழுவினர் மற்றும் பயணிகள்

விமானி கஞ்சா போதையில்: 300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்!

தாய்லாந்தின் புகெட் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில்…

ஆகஸ்ட் 13, 2026

5 ஆண்டுகளில் 3,718 செயலிகள் முடக்கம்: சைபர் மோசடியில் ரூ.11,158 கோடி சேமிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் சைபர் மோசடியைத் தடுக்க…

ஆகஸ்ட் 13, 2026

இமாச்சல பிரதேசத்தில் கனமழை: உயிரிழப்பு 70 ஆக உயர்வு

இமாச்சல பிரதேசத்தில் 43 நாட்களாக பெய்து வரும்…

ஆகஸ்ட் 13, 2026

மக்களவையில் சுரங்கங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், 'சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்…

ஆகஸ்ட் 13, 2026

கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டு தடை: டி.கே.சிவகுமார் உத்தரவு

கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு: நாடு முழுவதும் தீவிர ஏற்பாடுகள்!

நாடு முழுவதும் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செல்போன் செயலிகள் மற்றும் ஆன்லைன் சுய கணக்கெடுப்பு முறை அறிமுகம்.

1 Min Read
இந்தியா

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயப்படுகிறது. இது பொது சுகாதாரத்திற்கு ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.

1 Min Read
இந்தியா

பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இது அரசியல்…

3 Min Read
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல் மீட்கப்படும் காட்சி
இந்தியா

காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை: உடல் மீட்பு

தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜாகீர் அகமது கனாய் சுட்டுக் கொல்லப்பட்டான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவனது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?