MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

இந்தியா

22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

Admin
Last updated: மே 13, 2026 6:20 காலை
Admin
Share
SHARE

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27 கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 'கெஸ் பேப்பர்' என்ற பெயரில் வினாத்தாள் கசிந்ததும், அதில் இருந்து சுமார் 600 மதிப்பெண்களுக்கு மேல் வினாக்கள் ஒத்துப்போனதும் முக்கியப் பிரச்சனையாக மாறியது.

இதையடுத்து, தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. மத்திய முகமைகளுக்குத் தேவையான ஆவணங்களை வழங்கி, தேசிய தேர்வு முகமை இந்த விசாரணையைத் தீவிரப்படுத்தியது. அது தொடர்பான விளக்கத்தை கடந்த 10-ஆம் தேதியன்று தெரிவித்தது. இந்தச் சூழலில், சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி இருந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று அதிரடியாக அறிவித்தது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தளப் பதிவில், 'தேசியத் தேர்வுகளை நியாயமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் நடத்துவதில் எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க, நீட் தேர்வு விவகார நடவடிக்கைகளுக்காக மத்திய முகமைகளுக்கு என்.டி.ஏ. பரிந்துரைத்திருந்தது. மத்திய முகமைகளுடன் ஒருங்கிணைந்து என்.டி.ஏ. ஆய்வு செய்த தகவல்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையிலும், இதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், மத்திய அரசின் ஒப்புதலுடன், தேசியத் தேர்வு முகமை ஒரு முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் (யு.ஜி.) தேர்வை ரத்து செய்யவும், தனியாக அறிவிக்கப்படும் தேதிகளில் அத்தேர்வை மீண்டும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.டி.ஏ.வுக்கு கிடைத்த தகவல்களையும், சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளையும் ஒருங்கிணைத்து பார்க்கும் போது, தற்போதைய தேர்வு நடைமுறையை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க இயலாது. தேர்வு மீண்டும் நடத்தப்படும் தேதி மற்றும் அதற்கான புதிய ஹால்டிக்கெட் வெளியீடு குறித்த அட்டவணை வரும் நாட்களில் என்.டி.ஏ. அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்.

இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை சி.பி.ஐ.க்கு பரிந்துரைக்க மத்திய அரசு மேலும் ஒரு முடிவை எடுத்துள்ளது. அத்துறையின் விசாரணைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், ஆவணங்களையும், உதவிகளையும் வழங்கி என்.டி.ஏ. முழுஒத்துழைப்பை வழங்கும். தேர்வு மீண்டும் நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிரமங்கள் ஏற்படும் என்பதை என்.டி.ஏ. நன்கு உணர்ந்துள்ளது. இத்தகைய பின்விளைவுகளை என்.டி.ஏ. சாதாரணமாக கருதவில்லை. இந்த தேர்வுக்கு பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதி நிலை மற்றும் அவர்களால் தேர்வுசெய்யப்பட்ட தேர்வு மையங்கள் ஆகியவை மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுக்கும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். இதற்குப் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. மேலும், கூடுதல் தேர்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மேலும், மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணங்கள் அவர்களுக்கு திருப்பியளிக்கப்படும்.

மேலும் இதுதொடர்பான விவரங்களை neet-ug@nta.ac.in என்ற இணையதளத்தையோ, 011-40759000, 011-69227700 என்ற எண்களையோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்காக சி.பி.ஐ.யிடம் வழக்கை மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்தது.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குனர் அபிஷேக் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 'நீட் தேர்வு ரத்துக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். தேர்வில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. நீட் மறுதேர்வு குறித்து எனது குழுவுடன் அமர்ந்து ஆலோசனை நடத்துவேன். இன்னும் 7 அல்லது 10 நாட்களில், மறுதேர்வுக்கான முழு கால அட்டவணையும் அறிவிக்கப்படும். அப்போதுதான் கல்வியாண்டும், மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும். மறுதேர்வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். எந்த தவறும் இன்றி மறுதேர்வு நடத்தப்படும்' என்று அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு
Next Article தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசின் திடீர் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

நீட் தேர்வை மீண்டும் எழுதும் மாணவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'இந்த முறையாவது எந்த குளறுபடியும் இல்லாமல் தேர்வை நடத்துங்கள்' என அவர்…

1 Min Read
இந்தியா

காவிரி நீர் பிரச்சினை: பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா தயார்

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கர்நாடகா தயாராக உள்ளதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டம்…

1 Min Read
இந்தியா

நொய்டாவில் தேனிலவில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் மீது வழக்கு

சிக்கிமில் தேனிலவுக்கு சென்ற புதுமண பெண், மாடிப்படிக்கட்டில் இருந்து தள்ளி கொலை செய்ய முயன்ற கணவர் மீது நொய்டா செக்டார்-113 காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான…

1 Min Read
இந்தியா

சர்வதேச யோகா தினம்: இந்தியாவும் உலகமும் இணைந்ததாக பிரதமர் மோடி

12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்தியாவும் உலகமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் யோகாசனப் பயிற்சிகள் நடைபெற்றன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?