MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: கைதானவர் குடும்பத்தில் 5 பேர் தேர்ச்சி அம்பலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: கைதானவர் குடும்பத்தில் 5 பேர் தேர்ச்சி அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: கைதானவர் குடும்பத்தில் 5 பேர் தேர்ச்சி அம்பலம்!

இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: கைதானவர் குடும்பத்தில் 5 பேர் தேர்ச்சி அம்பலம்!

Admin
Last updated: மே 18, 2026 3:00 மணி
Admin
Share
SHARE

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பின்னணி குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, வினாத்தாளை கசியவிட்டதாகக் கூறப்படும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், 2025 நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தேர்வு ரத்து செய்து மறுதேர்வு அறிவித்தது. இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் மீது மத்திய அரசு உத்தரவின் பேரில் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜஸ்தானின் ஜம்வா ராம் கர்கைச் சேர்ந்த சகோதரர்களான மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் ஆகியோர், குருஹ்ராம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து சுமார் ரூ.30 லட்சத்திற்கு வினாத்தாளை வாங்கியதாகத் தெரியவந்துள்ளது. இந்த வினாத்தாளை தங்கள் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் விற்றுள்ளனர்.

இந்த வினாத்தாள் கசிவு மோசடியின் மையமாக ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சிகார் பகுதி மாறியுள்ளது. இங்குள்ள எம்.பி.பி.எஸ் ஆலோசனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்டவாரியா, வினாத்தாளை வாங்கி, கேரளாவில் படிக்கும் மாணவர்களுக்கு விற்றுள்ளார். அந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கும் வினாத்தாளைப் பகிர்ந்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குருஹ்ராம் மருத்துவர் கருதப்படுகிறார். மேலும், கைது செய்யப்பட்ட தினேஷ் பிவாலுக்கு ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வில், இந்த வினாத்தாள் கசிவு மோசடியில் கைதான மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மங்கிலாலின் மகன் விகாஸ் 85.11% மதிப்பெண் பெற்று சவாய் மாதோப்பூர் மருத்துவக் கல்லூரியிலும், மகள் பிரகதி 89.08% மதிப்பெண் பெற்று டவுசா மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். இதேபோல், தினேஷ் பிவாலின் மகள் கஞ்சன், வாரணாசி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கன்ஷியாமின் மகள் சானியா மும்பை அரசு மருத்துவக் கல்லூரியிலும், பாலக் ஜெய்ப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் முந்தைய தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்த நிலையில், 2025 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ளனர். இது, வினாத்தாள் கசிவு மூலம் இவர்கள் தேர்ச்சி பெற்றார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Medical AdmissionNEET ExamPaper Leakநீட் தேர்வுமருத்துவக் கல்விவினாத்தாள் கசிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 12 திருக்கல்யாணங்கள்: மதங்க ரிஷிக்கு மணக்கோலத்தில் சிவன்-அம்பாள் காட்சி!
Next Article தமிழகத்தில் தொடர் கொலைகள்: ஸ்டாலின் அரசுக்கு தினகரன் கடும் கண்டனம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

இந்தியா

மும்மொழி சட்டம்: ஜூலை 1 முதல் CBSC பள்ளிகளில் அமல்!

ஜூலை 1 முதல் CBSC பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 3-வது மொழி கட்டாயமாக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின்படி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 Min Read
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்துகிறார்
இந்தியா

வளர்ந்த இந்தியாவிற்கு தரமான கல்வி அவசியம்: குடியரசுத் தலைவர்

தரமான கல்வி இருந்தால் மட்டுமே வளர்ந்த இந்தியாவை சாத்தியப்படுத்த முடியும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தெரிவித்தார்.

1 Min Read
மும்பையில் நிலச்சரிவு மீட்புப் பணிகள்
இந்தியா

மும்பையில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

மும்பையில் நிலச்சரிவு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். 4 முதல் 5 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
மாலியில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி வைர வியாபாரி
இந்தியா

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வைர வியாபாரி ரூ.44 கோடி பிணையில் மீட்பு

மாலியில் கடத்தப்பட்ட 75 வயது இந்திய வம்சாவளி வைர வியாபாரி, குடும்பத்தினர் செலுத்திய ரூ.44 கோடி பிணையத் தொகையால் மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?