MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு

காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்

Admin
Last updated: ஜூலை 8, 2026 3:42 மணி
Admin
Share
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
SHARE

காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுத்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்குகள் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சியினர், பிறரை குறை கூறுவதற்கு தகுதியில்லை என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே, பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் எந்த உரிமைகளையும் பறிக்கவில்லை. எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சி செய்கிறீர்கள். நேஷனல் ஹெரால்டு வழக்குகள் உட்பட பல ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக தோல்வியையே சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், யாரையும் குறை கூற தகுதியில்லை என்பதே எங்கள் வாதம். இதில் என்ன அவதூறு கண்டீர்கள்?

மேலும், பழைய கூட்டணி பழக்கத்தின் காரணமாக, திமுகவின் ₹1 வரிக்கு 29 பைசா என்ற புளித்துப் போன பொய் பிரச்சாரத்தையே நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சி இன்னும் 'கோமா' நிலையில் இருந்து மீளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை 300-க்கு அதிகமாகவும் உயர்த்திய 'VB G RAM G' திட்டத்தை உங்கள் புதிய கூட்டணிக் கட்சியான திமுக தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவது உங்களுக்குத் தெரியுமா? கள நிலவரம் தெரியாமல் அந்தத் திட்டத்தை நீங்கள் எதிர்ப்பது ஏன்?

கச்சத்தீவை தாரை வார்த்து தமிழக மீனவர்களை வஞ்சித்தது அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள். எமர்ஜென்சி என்ற பெயரில் மாநிலங்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரித்ததும், Article 356-ஐ பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை கவிழ்த்ததும் உங்கள் காங்கிரஸ் கட்சிதான். காவிரி பங்கீட்டில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ். முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை பிற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ்.

தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதும் உங்கள் காங்கிரஸ் கட்சியே. இப்படி ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, கூட்டாட்சி தத்துவத்தை பலமுறை தீயிட்டு கொளுத்திய காங்கிரஸ் கட்சி, தற்போது மட்டும் மாநில உரிமைகளைப் பற்றி பேசுவது நியாயமா திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே?

எப்பொழுதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகளும் வருகின்றன. பல வருடங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உங்கள் காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு நல்லது செய்வதை பற்றி யோசிக்காமல், தமிழக மக்களுக்கு மீண்டும் எப்படி துரோகம் செய்யலாம் என உள்ளே சிந்தித்துக் கொண்டு, வெளியே தமிழகத்தின் உரிமைகள் பற்றி பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போலானது என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BetrayalBJPCongressManickam TagoreNainar NagesendranTamil Nadu Rightsகாங்கிரஸ்தமிழக உரிமைகள்துரோகம்நயினார் நாகேந்திரன்பாஜகமாணிக்கம் தாகூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி நேர்மையான அதிகாரிகளை நீக்கும் தவெக அரசு: ஜோதி நிர்மலாசாமியின் பதவி விலகல்?
Next Article தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சுங்கச்சாவடிகளில் நேர்மையான சேவை: வேல்முருகன் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வயநாடு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட மதுரை தம்பதி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பிய மதுரை தம்பதி: வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, லாரிக்கு அடியில் இருந்தும் உயிர் தப்பிய மதுரை…

ஜூலை 8, 2026

இந்தூரில் சிறுத்தை தாக்குதல்: டெலிவரி ஊழியரை குறிவைத்த காட்சி வைரல்

இந்தூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, உணவு…

ஜூலை 8, 2026

பிவாண்டியில் ஸ்பைடர் மேன்: வெள்ளத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த இளைஞர்

பிவாண்டியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஸ்பைடர் மேன்…

ஜூலை 8, 2026

அமர்நாத் யாத்திரை: 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

அமர்நாத் யாத்திரை: இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில்…

ஜூலை 8, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஜூலை 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜயதாரணி பேச்சு: த.வெ.க.வில் இணைந்த பின் விஜயதாரணி பேட்டி

தமிழக வெற்றிக் கழகம் சாமானிய மக்களின் கட்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவையே வழிநடத்தும் இடத்தில் த.வெ.க. இருக்கும் என்றும் விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை…

0 Min Read
தமிழ்நாடு

சென்னையில் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

முதல்-அமைச்சர் விஜய், சென்னையில் 300 புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகள் பெரம்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன.

1 Min Read
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறித்த அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.13,700-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி உள்ளது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?