MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதலுதவி தவறாக சித்தரிக்கப்பட்டது – அமைச்சர் விஸ்வநாதன் வேதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முதலுதவி தவறாக சித்தரிக்கப்பட்டது – அமைச்சர் விஸ்வநாதன் வேதனை
தமிழ்நாடு

முதலுதவி தவறாக சித்தரிக்கப்பட்டது – அமைச்சர் விஸ்வநாதன் வேதனை

Admin
Last updated: June 25, 2026 2:39 pm
Admin
Share
SHARE

மதுரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின் போது, வெயிலால் மயக்கமடைந்த மாணவிகளுக்கு தான் செய்த முதலுதவி, ஊடகங்களில் தவறான நோக்கில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் கடும் வெயிலின் காரணமாக மயக்கமடைந்தனர். அவர்களுக்கு நான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்பிரச்சினையில் எனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த 21-ந்தேதி மதுரை மாவட்டம் மேலூரில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். போட்டி முடிந்து, மேடையில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு அமைச்சர் முதலுதவி செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில், ஒரு சிறுமியின் கால்களை அமுக்கி விட்டதாகவும், மற்றொரு சிறுமிக்கு கால் விரல்களுக்கு சுளுக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பொது இடத்தில் சிறுமிகளின் கால்களை எப்படி தொடலாம் என அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சர்ச்சைக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். தனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் விஸ்வநாதன்தவறான சித்தரிப்புமதுரைமாரத்தான் போட்டிமுதலுதவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்
Next Article வி.பி.சிங்கின் அர்ப்பணிப்பு: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை…

June 25, 2026

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.

ஆட்சி அமைக்க விஜயை அழைக்காதது ஏன்?  என்பது குறித்து ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், விஜய்க்கு…

1 Min Read
தமிழ்நாடு

தாம்பரத்தில் புதிய குப்பை மேலாண்மை தொழில்நுட்பம் அறிமுகம்

தாம்பரத்தில், தமிழகத்தின் முதல்முறையாக, கம்ப்ரஸர் இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அழுத்தி, மூடப்பட்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது துர்நாற்றம் மற்றும்…

1 Min Read
தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஆபாச படம் அனுப்பிய ஆசிரியர் கைது

மாணவர்களுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் புகார் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

0 Min Read
தமிழ்நாடு

அடுத்த கூட்டத் தொடரில் பொதுச்சேவை உரிமைச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

சான்றிதழ்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டி, பொதுச்சேவை உரிமைச் சட்டத்தை அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?