MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு

அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்

Admin
Last updated: ஜூன் 28, 2026 3:04 மணி
Admin
Share
SHARE

பொது இடத்தில் அமைச்சர் டி.சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ வெளியான நிலையில், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி நாளை (29-06-2026, திங்கட்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், 'பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா' – 'பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க' போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMinisterஅமைச்சர்ஆர்ப்பாட்டம்டி.சரத்குமார்திமுகமாணவரணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வார விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
Next Article AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொல்கத்தா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தினர் உட்பட 9 பேர்…

ஆகஸ்ட் 20, 2026

வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை: பாஜகவில் இருந்து விலகிய தேசிய செய்தித் தொடர்பாளர்

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத், வீட்டு…

ஆகஸ்ட் 20, 2026

பிரதமர் மோடி அமைச்சரவை மாற்றம்: திமுகவுக்கு இடம்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில்…

ஆகஸ்ட் 20, 2026

டெல்லியில் எரிவாயு மையத்தில் வெடிவிபத்து: 3 பேர் பலி

டெல்லியில் எரிவாயு மையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில்…

ஆகஸ்ட் 20, 2026

புனே இனிப்பு கடை மீது நடவடிக்கை சரியே: உணவு பாதுகாப்பு ஆணையர்

புனே இனிப்பு கடை மீது உணவுப் பாதுகாப்பு…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் லோகோ
தமிழ்நாடு

மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவு அடிக்கடி தோல்வியில் முடிகிறது. இதை சரிசெய்ய ஐ.ஆர்.சி.டி.சி. தனது இணையதளத்தை மேம்படுத்தி புதிய வடிவமைப்புடன் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

1 Min Read
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜர்
தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை முன் ஆஜரான எ.வ.வேலு: விசாரணை தீவிரம்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மீது சாலை அமைக்கும் பணிகளில் 3.23 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலை ஒளிபரப்பு: சபாநாயகர் பேட்டி

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படுமா? என்ற கேள்விக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டியளித்துள்ளார். இது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தைக் காக்கும் வலிமை நமக்கே! – ஸ்டாலின் உறுதி

மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் நலன் மற்றும் உரிமைகளைக் காக்கும் தனது கட்சியின் உறுதியைத் தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் உதவிய அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி கூறி, தமிழ்நாட்டைக் காக்கும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?