MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்

விளையாட்டு

AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 28, 2026 3:33 மணி
Admin
Share
SHARE

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் முன்வைக்கப்படும் பாலின பாகுபாடு கருத்துகளுக்கு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்று தனது உலகக்கோப்பை பயணத்தை நிறைவு செய்தது.

பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனா மிர், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் விமர்சிக்கப்படும் விதத்தில் இருக்கும் இரட்டை நிலையை கடுமையாக கேள்வி எழுப்பினார். ஆடவர் அணி சிறப்பாக செயல்படாத போது இதேபோன்ற கருத்துக்கள் ஏன் எழுப்பப்படுவதில்லை என்றும் அவர் வினவினார். 'ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் செயல்பாடுகளைப் பற்றி பேசும்போது இங்கு இருக்கும் இரட்டை நிலையை என்னால் பார்க்க முடிகிறது. இந்த விமர்சனங்களின் தொனியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம், அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்பது உண்மைதான், ஆனால் அது மகளிர் அணி என்பதால் ஏன் அதற்கு ஒரு பாலினத்தை ஏன் சேர்க்க வேண்டும்?' என்று சனா மிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராகப் பணியாற்றி வரும் சனா, அணியின் தோல்வி மீதான ஏமாற்றம் நியாயமானது என்றாலும், அதை வெளிப்படுத்தும் விதம் கவலை அளிப்பதாகக் கூறினார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், மகளிர் அணியின் செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்கும் போது அவர்களுக்கு தேவையான உரிய மரியாதையை நாம் இன்னும் வழங்குவதில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். பாகிஸ்தானில் பெண்கள் தொழில்முறை கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து விளையாடுவதில் இருக்கும் சவால்களை சுட்டிக்காட்டிய அவர், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார். 'பாகிஸ்தான் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க பல வருடங்கள் ஆனது. ஆனால், இந்த மனநிலையை நாம் மாற்றாத வரை நம்மால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது' என்றார்.

மேலும், சமூக வலைதளங்களில் பெண் கிரிக்கெட் வீரர்களை கேலி செய்வதற்கும், தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பயன்படுத்தப்படுவதை சனா மிர் கடுமையாக விமர்சித்தார். இதனால் சம்பந்தப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். அணியின் செயல்பாடு கிரிக்கெட் திறமையின் அடிப்படையில் மதிப்பிடப்படாமல், பாலினத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுவது தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறினார். இறுதியாக, மகளிர் கிரிக்கெட்டில் புதிய திறமைகளைக் கண்டறிவதற்கும், வீராங்கனைகளுக்குள் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதற்கும் அதிக அளவிலான உள்நாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று சனா மிர் வலியுறுத்தினார். அணியில் தங்களது இடத்திற்குப் போட்டி இல்லை என்பதை வீராங்கனைகள் உணரும் போது, அது அவர்களின் ஆட்டத்திறனைப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AI வீடியோக்கள்சனா மிர்பாகிஸ்தான் கிரிக்கெட்பாலின பாகுபாடுமகளிர் கிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்
Next Article மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகிகள்: வைகோ மீது குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: பிரப்சிம்ரன் சிங் அசத்தல்! பஞ்சாப் கிங்ஸ் வீரர் புதிய சாதனை!

ஐபிஎல் 2026ல் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்சிம்ரன் சிங் 400 ரன்கள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 32 பந்துகளில் 57…

1 Min Read
கீரான் பொல்லார்டு டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் அடித்த சாதனை
விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள்: பொல்லார்டு புதிய சாதனை!

டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை கடந்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீரான் பொல்லார்டு பெற்றுள்ளார். கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக இந்த…

1 Min Read
ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் விளையாடும் காட்சி
விளையாட்டு

ஹர்திக் பாண்டியா: மும்பையை வாங்க சிஎஸ்கேவின் மெகா ஆஃபர்!

ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே அணி ரூ.10 கோடி ரொக்கத்துடன் இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்களை தர முன்வந்துள்ளது. ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க சிஎஸ்கே மறுப்பு தெரிவித்துள்ளது.

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி: ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து!

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். 'இங்குதான் தவறு நடந்துவிட்டது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?