MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக நிதிநிலை: அமைச்சர் அவதூறு – தங்கம் தென்னரசு கண்டனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக நிதிநிலை: அமைச்சர் அவதூறு – தங்கம் தென்னரசு கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக நிதிநிலை: அமைச்சர் அவதூறு – தங்கம் தென்னரசு கண்டனம்!

அரசியல்

தமிழக நிதிநிலை: அமைச்சர் அவதூறு – தங்கம் தென்னரசு கண்டனம்!

Admin
Last updated: மே 17, 2026 5:59 மணி
Admin
Share
SHARE

புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழில்துறை அமைச்சர், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்து அடிப்படைப் புரிதல் ஏதுமின்றி, "பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க" என்று அவதூறு பரப்புவது விஷமத்தனமானது மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கதும் ஆகும் என முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பதிவில், "முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், 'பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவதும், உள்நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத் தக்கனவும் ஆகும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இருப்பினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளரும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, தனது முதல் உரையில் தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனாவும் இதேபோல் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தங்கம் தென்னரசுவின் கண்டனம் முக்கியத்துவம் பெறுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Finance MinisterTamil Nadu Politicsசட்டமன்ற தேர்தல்தங்கம் தென்னரசுதமிழக செய்திகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 4 பேர் பலி!
Next Article கோலி, வெங்கடேஷ் ஐயர் அதிரடி: பெங்களூரு அணிக்கு 223 ரன்கள் இலக்கு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதி

கர்நாடகா: காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொலை

கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் வேட்டையாடச்…

ஆகஸ்ட் 16, 2026

திருப்பதியில் தேசியக்கொடி ஏற்றும்போது மயங்கி விழுந்த அமைச்சர்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் 80-வது சுதந்திர தின…

ஆகஸ்ட் 16, 2026

வந்தே மாதரம் பாடலில் சோனியா காந்தி தலையிட்டாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு

சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடலின்…

ஆகஸ்ட் 16, 2026

அமராவதியில் தேசிய கொடி ஏற்றிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று நடைபெற்ற சுதந்திர…

ஆகஸ்ட் 16, 2026

சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்த கோவா டிஜிபி குணமடைந்து டிஸ்சார்ஜ்

சுதந்திர தின விழா அணிவகுப்பின் போது மயங்கி…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பாஜகவில் இருந்து விலகும் விஜயதாரணி: த.வெ.க.வில் இணைகிறார்!

பாஜகவில் அதிருப்தி அடைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, கட்சிப் பதவிகள் கிடைக்காததால் அதிருப்தியடைந்து, பாஜகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார்.

1 Min Read
அரசியல்

மாணவி கொலை: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்த நீதிபதி

தூத்துக்குடி வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில், குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். தன் மகள் போன்ற…

2 Min Read
அரசியல்

திட்டத்தின் பெயரை மாற்றினாலும் சாதனையை அழிக்க முடியாது – ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றினாலும் அதன் சாதனைகளை மக்களிடமிருந்து அழிக்க முடியாது என்றும், இது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல் என்றும்…

1 Min Read
திமுக மற்றும் பாஜக தலைவர்கள் சந்திப்பு குறித்த செய்தி
தமிழ்நாடு

திமுக – பாஜக மறைமுகப் பேச்சுவார்த்தை: அரசியல் களத்தில் பரபரப்பு!

திமுக - பாஜக இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படும் தகவல், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காண்போம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?