MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகத்துக்கு எதிரானது – அன்புமணி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகத்துக்கு எதிரானது – அன்புமணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகத்துக்கு எதிரானது – அன்புமணி

தமிழ்நாடு

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகத்துக்கு எதிரானது – அன்புமணி

Admin
Last updated: மே 25, 2026 10:08 மணி
Admin
Share
SHARE

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் தவெகவில் இணைந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர்களின் இந்த செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 20 நாட்களே ஆன நிலையில், 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை அன்புமணி எழுப்பியுள்ளார். காவிரி பிரச்சினைக்காகவோ அல்லது தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை என்றும், மாறாக ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பே அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், இத்தகைய செயல்களை எவ்வாறு அனுமதிக்கிறார் என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியில் இணைய வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெகவில் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதன் மூலம் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் சேர்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை தவெக தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பதுதான் இதற்கான காரணம். இதன் மூலம் முதல்வர் விஜய் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.

ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியில் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதல்வர் விஜய்க்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்தபட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்அன்புமணி ராமதாஸ்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய்க்கு அவகாசம் தேவை: துரை வைகோ வலியுறுத்தல்
Next Article சுயமரியாதைக்காக ராஜினாமா: 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய ரயில்வேயின் சொகுசு ரயில் பெட்டி

ரயில் பெட்டியில் பூஜை: ரெயில்வே விளக்கம்

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யப்பட்ட சொகுசு ரயில் பெட்டியில், பூஜை நடத்திக் கொள்ள…

ஜூலை 13, 2026

ரயில்களில் முதலிரவு அலங்காரம் முதல் பூஜை வரை: சர்ச்சையில் ரயில்வே நிர்வாகம்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலிரவு அலங்காரம், பின்னர்…

ஜூலை 13, 2026

புதிய வாக்காளர்கள் பெற்றோரின் விவரங்களை அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும்…

ஜூலை 13, 2026

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்கள்: ராஜ்நாத் சிங்

உலகளாவிய சுகாதார சவால்களுக்கு உள்நாட்டுத் தீர்வுகளை இந்தியா…

ஜூலை 13, 2026

இந்திய கல்வி முறை குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்திய கல்வி முறை நேர்மையற்றதாகவும், மாணவர்களை மிரட்டி…

ஜூலை 13, 2026

You Might Also Like

எஸ்டிபிஐ கட்சி தலைவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

வாக்காளர் சேர்க்கை: புதிய நிபந்தனைக்கு எஸ்டிபிஐ கண்டனம்

வாக்காளர் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகளை எஸ்டிபிஐ கட்சி கண்டித்துள்ளது. இது முதன்முறை வாக்காளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினருக்கு சுமையாக அமையும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

2 Min Read
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

முதல்வரை விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் நிர்மல் குமார்

முதல்வர் குறித்து தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஆளுநரின் அதிகார வரம்பு குறித்தும்…

2 Min Read
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
இந்தியா

டிசம்பரில் நாடு திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா அச்சம்

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பரில் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார். ஆனால், நாடு திரும்பும்போது கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என அச்சம்…

2 Min Read
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிக்கிறார்
தமிழ்நாடு

திமுகவினர் ஓடுவதில்லை: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய எ.வ.வேலு பேட்டி

சிங்கப்பூரில் இருதய சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 'ஓடுவது, ஒளிவது திமுகவினரின் பழக்கம் இல்லை' என்றார். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?