MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

இந்தியா

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Admin
Last updated: மே 26, 2026 8:34 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேகேதாட்டு அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மறு ஆய்வு மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மறு ஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் கவனமாக பரிசீலித்தோம். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம் என்று கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

முன்னதாக, மேகேதாட்டு அணை திட்டத்தால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் செயல் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு, இந்த திட்டத்தால் தமிழகம் பாதிக்கப்படாது என்றும், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை வழங்க எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவித்தது. இருப்பினும், அன்றைய உச்ச நீதிமன்ற அமர்வு, திட்ட வரைவு அறிக்கை காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என்றும், அவை ஒப்புதல் அளித்தால் மட்டுமே வரைவு அறிக்கை ஏற்கப்படும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் மனு அவசரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் கூறி மனுவை நிராகரித்தது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mekedatu DamSupreme Courtஉச்ச நீதிமன்றம்கர்நாடகாகாவிரிதமிழக அரசுமேகேதாட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய்க்கு சாமானியர்களின் 7 கேள்விகள்!
Next Article 69% இடஒதுக்கீடு: முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

குடும்ப தகராறில் கொலை செய்யப்பட்ட ஆண்கள் குறித்த ஆய்வறிக்கை
இந்தியா

குடும்ப தகராறில் 6 மாதங்களில் 554 ஆண்கள் கொலை: அதிர்ச்சி அறிக்கை

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஏகம் நியாய் அறக்கட்டளை வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, கடந்த 6 மாதங்களில் குடும்ப தகராறில் 554 ஆண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2 Min Read
இந்திய மருத்துவ கவுன்சில் (என்.எம்.சி) எம்.பி.பி.எஸ் இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது
கல்வி & வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் 9,911 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு: கர்நாடகா, தமிழ்நாடு முன்னிலை

நாடு முழுவதும் 9,911 எம்.பி.பி.எஸ் இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் 1,36,939 இடங்கள் மாணவர் சேர்க்கைக்குக் கிடைக்கும்.

2 Min Read
திருமலை ஏழுமலையான் கோயில் அருகே உள்ள சுவாமி புஷ்கரணி குளம்
இந்தியா

திருமலை சுவாமி புஷ்கரணி: ஆகஸ்ட் மாதம் பக்தர்களுக்கு நீராட தடை

திருமலை ஏழுமலையான் கோயில் அருகே உள்ள புனிதமான சுவாமி புஷ்கரணி குளத்தில், ஆகஸ்ட் 1 முதல் 31 வரை பக்தர்கள் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை…

1 Min Read
இந்தியா

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?