MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனைவி சடலத்தை கடலில் வீசிய கணவர் கைது: மலப்புரத்தில் பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனைவி சடலத்தை கடலில் வீசிய கணவர் கைது: மலப்புரத்தில் பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மனைவி சடலத்தை கடலில் வீசிய கணவர் கைது: மலப்புரத்தில் பரபரப்பு

இந்தியா

மனைவி சடலத்தை கடலில் வீசிய கணவர் கைது: மலப்புரத்தில் பரபரப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 24, 2026 12:39 மணி
Fernandez
Share
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அடங்கிய சாக்கு மூட்டை
கடலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடங்கிய சாக்கு மூட்டை.
SHARE

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே படிங்காரக்கரை பகுதியில் வசித்து வந்த உசைன் (42) என்ற மீனவர், தனது மனைவி பவுசியாவை (37) கொலை செய்து, அவரது உடலை கடலில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவர் உசைனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து மேலும் விவரம் அறியும் போது, கடந்த சில நாட்களாக பவுசியாவை காணவில்லை என அவரது உறவினர்கள் திரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க படகில் செல்ல முயன்றபோது, கடலில் ஒரு சாக்கு மூட்டை மிதந்து வருவதைக் கண்டனர். சந்தேகமடைந்த மீனவர்கள், அந்த மூட்டையை கரைக்கு எடுத்து வந்து பிரித்துப் பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் ஒரு பெண் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக திரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூட்டையில் இருந்த சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட பவுசியாவின் உடல் தான் அது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் உசைனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், உசைன் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று இரவு, படகில் இருந்த மீன்களை அள்ள வேண்டும் என்று கூறி பவுசியாவை தன்னுடன் படகிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து பவுசியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், இந்த கொலை சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க, அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கடலில் வீசியதாக உசைன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பவுசியா, தனது கணவரின் அனுமதியின்றி சில வீடுகளில் வேலைக்குச் சென்றதாகவும், இதை உசைன் கண்டித்தும் அவர் கேட்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த உசைன் மனைவியை கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணவன் உசைனை போலீசார் கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Husband ArrestedMalappuramMurderPravasiஉசைன்கணவர் கைதுகேரளாகொலைபவுசியாமலப்புரம்மனைவி சடலம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை அல்லது லோகோ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
Next Article முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் விஜய்: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காஷ்மீர் பண்டிட்டுகளின் முகவரிகள் மற்றும் செல்போன் எண்களை வெளியிட்ட தீவிரவாதிகள்

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் – முகவரி, செல்போன் எண்கள் வெளியீடு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகளின் கைப்பேசி எண்கள் மற்றும் வீட்டு முகவரிகளை…

ஆகஸ்ட் 24, 2026

ராகுல் மனுஸ்மிருதி பேச்சுக்கு யோகி ஆதித்யநாத் கண்டனம்

ராகுல் காந்தி நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதாக உத்தரப்…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பாஜக ஆர்ப்பாட்டம்: அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வலியுறுத்தல்

கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி…

ஆகஸ்ட் 24, 2026

மனைவி சடலத்தை கடலில் வீசிய கணவர் கைது: மலப்புரத்தில் பரபரப்பு

மலப்புரம்: மனைவியை கொலை செய்து உடலை கடலில்…

ஆகஸ்ட் 24, 2026

பெங்களூருவில் கார் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பெங்களூருவில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பிரதமர் இல்லத்தில் ஆலோசனை நடத்துகின்றனர்
இந்தியா

பிரதமர் இல்லத்தில் அமித் ஷா, நிதின் நவீன் அவசர ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், பிரதமர் இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம்…

1 Min Read
இந்தியா

PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பல்வேறு யோசனைகளை பிரதமர் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில், கல்வி நிறுவனங்கள்…

2 Min Read
ஜார்க்கண்ட் அரசுப் பணி தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் போராட்டம்
இந்தியா

ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு: 13வது நாள் மாணவர் போராட்டம்

ஜார்க்கண்ட் அரசுப் பணி தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மாணவர்கள் 13வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1 Min Read
இந்தியா

பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!

அரியானா மாநில நில மோசடி தொடர்பான பணப் பரிவர்த்தனை வழக்கில், ராபர்ட் வதேராவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?